பற்களுக்கான வேர் சிகிச்சை

Published By: Digital Desk 4

24 Jun, 2019 | 09:37 PM
image

நீரிழிவு நோயாளிகள், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாவிட்டால் அவர்களது கண், இதயம், சிறுநீரகம், கால் நரம்புகள் ஆகியவை பாதிக்கப்படுவதுடன் பற்களும் பாதிக்கப்படுகின்றன. சிலருக்கு பற்களில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு டீப் கிளீனிங் சிகிச்சை எனப்படும் பற்களுக்கான வேர் சிகிச்சை தேவைப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பற்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். 

சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களின் பற்களில் குறிப்பாக ஈறுகளில் தீவிர பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக அவர்கள் பற்களை இழக்கவும் நேரிடலாம். அத்துடன் சர்க்கரை நோயாளிகளுக்கு உமிழ் நீர் சுரக்கும் அளவு குறைவதால் வாய் பகுதிக்குள் வறட்சியும் ஏற்படும்.

இவர்களுக்கு ஈறுகளில் ஏதேனும் இரத்தக்கசிவோ அல்லது வீக்கமோ இருந்தால் உடனடியாக பல் மருத்துவ நிபுணரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஈறுகளில் தங்கும் அழுக்குகள், பற்களின் எலும்பை மட்டுமல்லாமல் தாடை எலும்பையும்  அரித்து விடக்கூடிய அபாயமும் உண்டு. 

அத்துடன் இவர்களுக்கு மயக்க நிலையில் தான் பற்களுக்கான வேர் சிகிச்சை எனப்படும் டீப் கிளினிங் சிகிச்சை  செய்ய வேண்டியதிருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் பற்களில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும், பற்களை டீப் கிளினிங் சிகிச்சை மூலம் சுத்தப் படுத்திக் கொண்ட பிறகு, அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முறையான பல் பரிசோதனையையும் செய்து கொள்ள வேண்டும்.

டொக்டர் ஸ்ரீனிவாஸ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29