அமெரிக்கா மாத்திரமின்றி சீனா - இந்தியாவும்  இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன  :  உதய கம்பன்பில

Published By: R. Kalaichelvan

24 Jun, 2019 | 06:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இராணுவம் தொடர்பாக அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொள்ளவிருந்த ஒப்பந்த்திற்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியாகியமையினாலேயே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை இரத்து செய்தார் என்று தெரிவித்த பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, அமெரிக்கா மாத்திரமின்றி சீனா இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன என்றும் தெரிவித்தார். 

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது : 

2,500 வருட நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை இதற்கு முன்னர் இது போன்றதொரு பாரிய நெருக்கடிக்கு ஒருபோதும் முகங்கொடுத்ததில்லை. விடுதலைப் புலிகள் கூட இது போன்றதொரு நெருக்கடியை ஏற்படுத்தவில்லை என்று தற்போது கூறுகின்றோம். அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன? 

இலங்கை,  அமெரிக்க மற்றும் சீனாவுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தகளுக்கூடாக பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். சீனா மற்றும் ரஷ்ய அரசின் தாக்கம் இன்றும் வியட்நாமில் காணப்படுகின்றது. 

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களின் தாக்கத்தினால் இன்றும் அங்கு அங்கவீனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இலங்கையில் இடமளிக்கப்பட்டால் நாமும் அதே நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். 

அமெரிக்கா அவசரமாக இலங்கை மீது கவனம் செலுத்தியுள்ளது. இராணுவம் தொடர்பாக இலங்கையுடன் செய்து கொள்ளப்படவிருந்த ஒப்பந்த்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டடையினால் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை இரத்து செய்துவிட்டார். 

அமெரிக்கா இவ்வாறு இலங்கை மீது திடீரென அவதானம் செலுத்தியமைக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தற்போதுள்ள அரசாங்கம் தோல்வியடையும் நிலைமையே காணப்படும் என்று இலங்கை தொடர்பான ஆய்வுக்கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை நிறுத்திக் கொள்வதற்கே அமெரிக்கா இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

தற்போது அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. அதற்கான வழியையும் நாமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 

இதே நிலைமை தொடர்ந்தால் நாம் பழைய நிலைமைக்கே செல்ல வேண்டியேற்படும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51