பாதி மாதங்கள் இருளாகவும், மீதி மாதங்கள் வெளிச்சமாகவுமுள்ள அதிசய தீவு     

Published By: J.G.Stephan

24 Jun, 2019 | 04:27 PM
image

ஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றான நோர்­வேயில் உள்ள சொம்­மா­ரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்­ப­டையில் உலகின் ஏனைய பகு­தி­க­ளி­லிருந்து முற்­றிலும் வேறு­பட்­ட­தாகும்.

ஆட்டிக் வட்­டத்தின் வடக்கில் அமைந்­துள்ள இந்த தீவில் நவம்பர் மாதத்­தி­லி­ருந்து ஜன­வரி மாதம் வரை இரு­ளா­கவே இருக்கும். அதேபோல் ஆண்டின் சில மாதங்கள் இதற்கு நேர் எதி­ரா­ன­தாக இருக்கும். அதன்­படி தற்­போது அந்த தீவில் சூரியன் மறை­யாமல் முற்­றிலும் பகல் வேளை­யா­கவே உள்­ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதி நள்­ளி­ர­வி­லி­ருந்தே இவ்­வாறு கால­நி­லையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 26ஆம் திகதி வரை 69 நாட்­க­ளுக்கு இவ்­வா­றான கால­நி­லையே நில­வ­வுள்­ளதால் அத் தீவில் வசிக்கும் மக்­களின் வாழ்க்கை நிலையில் பல மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. தங்­க­ளது வழக்­க­மான நேரத்தைக் கடைப்­பி­டித்­தலில் மிகுந்த சிக்­கல்­களை எதிர் கொண்­டுள்­ளனர். இதனால் தங்­க­ளது தீவை உலகின் முதல் நேர­மற்ற வல­ய­மாக அறி­விக்­கு­மாறு அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இது­கு­றித்து சொம்­மா­ரோயி தீவில் வசிக்கும் ஒரு­வ­ரான கேஜெல் ஓவ் ஹெவ்டிங் கூறு­கையில், 'இது கொஞ்சம் பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மா­னது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் ஆழ­மாக சிந்­திக்க வேண்டிய விடயமும் கூட. கடிகார இயக்கத்தை நிறுத்திவைப்பதே இதற்கு சரியான தீர்வு' எனவும் கூறியுள்ளார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right