வீடொன்றின் நிலக்கீழ் அறையில் இயங்கி வந்த கச்சேரி பொலிஸாரால் முற்றுகை

Published By: Digital Desk 4

24 Jun, 2019 | 03:34 PM
image

வெள்ளவாயவில் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் பேரில் இரத்தினபுரிக்கு விரைந்த பொலிசார் வீடொன்றின் நிலக்கீழ் அறையில் அமைந்திருந்த சுரங்க அறையில் நடத்தப்பட்டு வந்த போலி அரசாங்க செயலகத்தை (கச்சேரி) கண்டுபிடித்து பெருமளவிலான போலி ஆவணப் பொருட்களை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

வெள்ளவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து குறித்த நபரை வெள்ளவாயப் பொலிசார் போலி பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் பலவற்றுடன் கைது செய்து விசாரணைக்குற்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில். குறித்த நபர் வழங்கிய தகவலின் பேரில் வெள்ளவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி. குணசேக்கர தலைமையிலான குழுவினர் இரத்தினபுரிக்கு  சென்று வீடொன்றினை சுற்றிவலைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்த வேளையில் வீட்டிற்கு அடியில் சுரங்க அறையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது சுரங்க அறையை சோதனையிட்ட பொலிசார் அங்கு அரச அலுவலகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரது பெயர்களுடன் கூடிய 68 ரப்பர் இலச்சினைகள், பிரபல சட்டத்தரணிகள் பலரது கையொப்பங்களுடன் கூடிய இலச்சினைகள் 05, காணி உறுதிகள் 15, மாநகர சபை வரிப்பண ஆவணங்கள் 23, பூமி ஆய்வியல் அறிக்கைகள் மற்றும் இரத்தினக்கல் அகல்வு அனுமதிப்பத்திரங்கள் 09, மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் 19, 

 ஆளடையாள அட்டைகள் 17, கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்கள் 12, பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் 29, காணி தொடர்பான ஆவணங்கள் 06, மின்சாரக் கட்டண பற்றுச்சீட்டுக்கள் 65, வருமானவரி சான்றிதழ்கள் 06, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்கள் 12, ஸ்கேன் இயந்திரங்கள், கணனித் தொகுதிகள் ஆகியனவே மீட்கப்பட்டனவாகும்.

மீட்கப்பட்ட  பொருட்களுடன் இரு இளைஞர்களையும், வெள்ளவாயப் பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர் வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆஜர் செய்யப்படுவரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். மீட்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவைகளென ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50