தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ள ரிஷாத்!

Published By: Vishnu

24 Jun, 2019 | 04:31 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியூதீன் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு  சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இராணுவ தளபதிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சட்டு உள்ளிட்ட அவர் விசாரணைகளை குழப்புகின்றார் என எதிர்தரப்பு குற்றம் சுமத்திவந்த நிலையிலும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களில் ஒருவருடன் வியாபார தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரையும் தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது முதல் சாட்சியமாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவுள்ளார். அதேபோல் மேலும் இரு அரச அதிகாரிகளும் வரவழைக்கப்படவுள்ளதா தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடி தாக்குதலுடன் தொடர்புபட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு துறை அதிகாரிகள் முன்னாள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு செயலாளர், அகில இலங்கை ஜமியத்துல் உலமா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றில் உறுப்பினர்கள்  உள்ளிட்ட பத்திற்கும் அதிகமானவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது. 

அடுத்துவரும் விசாரணைகளில் அரசியல் தரப்பினர் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் இஸ்லாமிய மத அமைப்புகளை வரவழைக்க தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்குழு கூறுகின்றது. எனினும் இந்த தெரிவுக்குழு முன்னிலையில் தம்மை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என போதுபல சேனா உள்ளிட்ட சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58