தாக்­குதல்களுக்கு பின்­ன­ர் சுற்­று­லாத்­து­றையை மேம்­ப­டுத்த அர­சாங்கம் புதிய திட்­டங்­களை வகுக்க வேண்டும்..!

Published By: J.G.Stephan

25 Jun, 2019 | 03:03 PM
image

இலங்­கையில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கு பின்­ன­ர், சுற்­று­லாத்­துறை பாரிய சவாலை எதிர்­நோக்­கி­யுள்­ளது. இவற்றை மீள் கட்­ட­மைப்­ப­தற்கும் வெளி­நா­டு­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுப்­ப­தற்கும் அர­சாங் கம் பல­த­ரப்­பட்ட செயற்­திட்­டங்­களை வேக­மாக முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்­கான இலங்கை பிர­தி­நி­தி­யாக நிய­மனம் பெற்­றுள்ள கிரேஸ் ஆசிர்­வாதம் தெரி­வித்­தார்.

  சுமார் மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேற்­பட்ட கால­மாக தமிழ்ப் பெண்ணாய் வெளி­நாட்டு சேவைத்­து­றையில் இலங்­கையை பிர­தி­நி­தித்­துவம் செய்­து ­வ­ரு­ப­வரும், ஆசி­யாவை பிர­தி­நிதித்­துவம் செய்து இர­சா­யன ஒழிப்பு நிறு­வ­னத்தில் (Organization for the Prohibition of Chemical Weapons-OPCW) 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை துணை இயக்­கு­ந­ராக பணி­யாற்றி தற்­போது பெல்­ஜியம், ல­க் ஷம்பேர்க் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்­கான உயர்ஸ்­தா­னி­க­ராக நிய­மிக்­கப்­பட்டு பத­வி­களை பொறுப்­பேற்­க­வுள்ள  திரு­மதி கிரேஸ் ஆசிர்­வாதம் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டிற்கு வழங்­கிய விசேட செவ்வி. 

கேள்வி : உங்­க­ளு­டைய இரா­ஜ­தந்­திர சேவை அனு­ப­வங்கள் பற்றி ? 

பதில் : நான் 1988 ஆம் ஆண்டு இலங்கை வெளி­நாட்டு அலு­வல்கள் சேவையை எனது முக்­கிய தொழி­லாக ஏற்­றுக்­கொண்டேன். அந்த நாள் முதற் ­கொண்டு இன்­று­வரை    இரா­ஜ­தந்­திர சேவையில்   பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்றி வரு­கின்றேன்.

  துணைப்­ப­ணிப்­பா­ள­ராக இருந்த  காலப்­ப­கு­தியில் 1991 ஆம் ஆண்டு ஏற்­பட்ட ஈராக், குவைத் யுத்­தத்­தின்­போது கூடு­த­லாக மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கும் அங்கே யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட இலங்கை மக்­களை இலங்­கைக்கு கொண்டு வந்து சேர்ப்­ப­தற்­காகவும் மிகவும்  தீவி­ர­மாக பணி­யாற்ற  வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அது தான்   எனது வெளி­நாட்டு சேவையில் எனக்கு கிடைத்த முக்­கி­ய­மான ஓர்  அனு­பவம். அதன்  பிறகு நான் பாகிஸ்­தானில் இரண்­டா­வது செய­லா­ள­ராக   பணி­யாற்­றினேன். பின்னர்  இலங்கை வந்து வெவ்­வேறு பிரி­வு­களில்  பணி­யாற்­றிய  பின்னர் ஜேர்­மன்  துணை தூது­வ­ராக நான்  கட­மை­யாற்­றினேன். அதற்கு பின்னர் முதல் தூது­வ­ராக பொன்  (ஜேர்மன்) நக­ரத்தில் நிய­மித்­தார்கள்  

தூது­வ­ராக இருக்­கும்­போது 1998  ஆம் ஆண்டு  கட்­டத்தில்  இலங்­கையில் யுத்தம் மிகவும்  உக்­கி­ர­மாக இருந்­தது. அச்­ச­ம­யத்தில்  மேலைத்­தேய நாடு­களில் உத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு மிகவும்  கஷ்­ட­மான நிலையில் நாங்கள் இருந்தோம். எவ்­வா­றா­யினும் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளா­கவும் தூது­வ­ரா­கவும் ஏனைய நாடு­களில்  வேலை செய்­ப­வர்கள் எல்­லோரும் ஒன்­றாக சேர்ந்து தேவை­யான உத­வி­களை சர்­வ­தேச மட்­டத்தில் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வச­தி­யாக இருந்­தது.

 பின்னர்  இலங்­கையின் தூது­வ­ராக நேபாள நாட்­டிற்குச் சென்றேன்.   இலங்­கைக்கும் நேபாள் நாட்­டிற்கும் உறவை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக சேவை செய்­ததை அடுத்து எனக்கு தேச­பந்து என்ற கௌர­வத்தை  அளித்­தார்கள். அதன் பின்னர் இலங்கை வந்து  சார்க்  நாடு­களுக்கும் தெற்­கா­சிய நாடு­க­ளுக்கும் பணிப்­பாளர்  நாய­க­மாக இரண்டு வரு­ட­காலம் சேவை­யாற்­றினேன். அந்த கால­கட்­டத்தில்  நாங்கள்  உச்­சி­மா­நாட்டை வெற்­றி­க­ர­மாக  நடத்­தினோம்.    அதன் பின்னர் உட­ன­டி­யாக என்னை நெதர்­லாந்­திற்கு தூது­வ­ராக நிய­மித்து 3 வரு­ட­காலம்  முடி­வ­டை­வ­தற்கு முன்னர் இர­சா­யன ஆயு­தங்­களை ஒழிப்­ப­தற்­கான நிறு­வ­னத்தில் என்னை  இரண்­டா­வது நிலையில் துணைப்­ப­ணிப்­பாளர் நாய­க­மாக நிய­மித்­தனர். அதன் பிறகு இலங்கை வந்து  வெளி­வி­வ­கார அமைச்சின் மேல­திக செய­லா­ள­ராக பணி­யாற்­றினேன்.

2017 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை நான் வெளி­வி­வ­கார அமைச்சின் இரா­ஜாங்க செய­லா­ள­ராக பணி­யாற்­றினேன். தற்­போது ஐரோப்­பிய ஒன்­றியம், பெல்­ஜி­யத்­திற்கும் ல­க் ஷம்­பேர்க்­கிற்­கு­மான  இலங்கை தூது­வ­ராக என்னை நிய­மித்­துள்­ளார்கள்.

கேள்வி : அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையின்  இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் எவ்­வாறுள்­ளன? 

பதில் : 2009 ஆம் ஆண்­டுக்கு பின்னர் எங்­க­ளு­டைய பணி­யா­னது  பொரு­ளா­தா­ரத்தை விட சமூ­கத்தின் பக்கம்  வலு­வாக பார்க்­கப்­பட்­டது.இப்­பொ­ழுதும் எமக்கு வழங்­கப்­படும் அறி­வு­ரைகள் முழு­வதும் எவ்­வாறு நாம்  பொரு­ளா­தார துறையை மேம்­ப­டுத்த ஏனைய   உத­வி­க­ளையும் அனு­ச­ர­ணை­க­ளை­யும் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்ற அடிப்­ப­டையில் அமைந்­துள்­ளன.   இலங்கை மட்­டு­மல்ல அபி­வி­ருத்தியடைந்த நாடுகள்  கூட பொரு­ளா­தார விருத்தி சம்­பந்­த­மான செயற்­பா­டு­களில்  தான் ஈடு­ப­டு­கி­ன்றன. இலங்கை மற்றும் மற்­றைய நாடு­களின் தூது­வ­ரா­ல­யங்கள் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வதில் முக்­கி­ய­மான இரா­ஜ­தந்­திர பணி­களை முன்­னெ­டுத்து  வரு­கின்­றன.

கேள்வி : இதற்கு  முன் இலங்­கையை பிர­தி­நி­தித்­துவம் செய்து மேற்­கொண்ட சேவையில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தென நீங்கள் கரு­து­வது?

பதில்: எங்­க­ளுடன் உறவை பேணும் நாடு­க­ளுடன் நாம்  எப்­போதும் பொறுப்­புடன் செய்து முடிக்க வேண்­டிய பணிகள் பல உள்­ளன. அந்த வகையில்   நாடு­க­ளுக்­கி­டை­யே இருக்கும் உறவை அடுத்த கட்ட வளர்ச்­சியை நோக்கி கொண்டு சொல்­ல­வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.

எனது 31 வருட இரா­ஜ­தந்­திர சேவையில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தென நான் கரு­து­வது, 2008 ஆம் ஆண்டு நெதர்­லாந்­திற்­கான தூது­வ­ராக இருக்கும் சமயம் இலங்­கையின் உள்­நாட்டு யுத்­த­மா­னது உச்­ச­கட்ட நிலையை அடைந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் அக்­கா­ல­கட்­டத்தில் விடு­தலைப் புலிகள் அமைப்பின் ஆத­ர­வா­ளர்­களால் எமக்கும், தூத­ரகத்­திற்கும் பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள் தொடர்ச்­சி­யா­கவே விடுக்­கப்­பட்­டன. இரண்டு முறை தூத­ர­கம் தாக்­கப்­பட்டு இலங்­கைக்கு எதி­ரான பிர­சா­ர­மொன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.  இந்­நி­லையில் அந்­நாட்டு அர­சியல் தலை­வர்கள் மற்றும் முத­லீட்­டா­ளர்­க­ளுடன் நாம் தனிப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி, இலங்கை மீது ஏற்­ப­டுத்­தப்­பட்ட எதிர்­ம­றை­யான பார்­வையை மாற்­ற­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. ஆனால், அக்­கா­ல­கட்­டத்தில் இலங்­கை­யா­னது மேலைத்­தேய நாடு­களின் ஆத­ர­வையும், பொரு­ளா­தார உத­வி­யையும் பெற­வேண்­டிய கட்­டா­யத்­தி­ல் இருந்­தது.   ஆனால், நாட்டின் உண்மை நிலை­வ­ரங்­களை ஓர­ளவு புரி­ய­வைத்து இலங்­கைக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருந்­தது.

கேள்வி : இரா­ஜ­தந்­திர சேவையில் உங்­களின் வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும் போது குடும்­பத்­தி­ன­ருடன் செல­வ­ளிக்கும் நேரம் குறை­வாக இருந்­தி­ருக்­குமே? 

பதில்: பெண்கள் என்­ற­வ­கையில் அதிக சமு­தாய பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளக் கூடி­ய­வர்­க­ளா­வா­கவே நாம் இருக்­கின்றோம். இலங்­கையின் வெளி­நாட்டுத்துறை சேவையில் 52 வீதம் பெண்­கள்தான் பணி­பு­ரி­கின்­றார்கள். இதில் என்ன பிரச்­சினை என்றால் பெண்கள் எல்­லா­து­றை­க­ளிலும் பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டிய திறமை மிக்­க­வர்­க­ளாக இருக்­கின்­றனர். ஆனால்   பிள்­ளைப்­பேறு, குடும்பம் என்று வரும்­போது சமூக விதிப்­ப­டி­ எங்­க­ளி­ட­மி­ருந்து  தனிப்­பட்ட எதிர்­பார்ப்­பொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது இதைத்தான் செய்­ய­வேண்டும் என்ற கட்­டுப்­பாட்டை தாண்டி விட்டோம்.பெண்கள் தற்­போது எந்த துறை­யிலும் எவ்­வ­கை­யான உயர்­ப­த­வியிலும் இருக்­கலாம், இலங்கை  முத­லா­வது பெண் பிர­த­மரை, இரண்­டு­முறை பெண் ஜனா­தி­ப­தியை உரு­வாக்­கிய நாடாக இருக்­கின்­றது.  அந்­த­வ­கையில் நாம் பெண்­ணிய சுதந்­தி­ரத்தை அனு­ப­விக்க தவ­ற­வில்லை. அதே போன்று தாய், மனைவி என்ற ஸ்தானத்தில்    தேவை­யான அன்­பையும்  பாசத்­தையும் கொடுக்­க­வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.  என்­னைப்­பொ­றுத்­த­மட்டில் எனது 2 குழந்­தை­க­ளுக்­கான நேரத்தை சரி­யாக செல­வ­ழித்­துள்ளேன், 24 மணி­நே­ரமும் தொழிற்­ப­ட­வேண்­டிய கட­மை­யையும் தடை இன்றி முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றேன். இவை யாவும் நாம் எவ்­வாறு எமது நேரத்தை பிரித்து திட்­ட­மிட்ட ரீதியில் செயற்­ப­டு­கின்றோம் என்­ப­தி­லேயே உள்­ளன.

கேள்வி : மலை­ய­கத்தின் பண்­டா­ர­வ­ளையில் பிறந்து வளர்ந்­த­வர்கள் நீங்கள்.  அங்­கி­ருந்து தற்­போது ஐரோப்­பிய ஒன்­றியம் வரை­யி­லான உங்­க­ளது பய­ணத்­தைப்­பற்றி என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்? 

பதில்: பண்­டா­ர­வளை திருக்குடும்ப கன்­னியர் மடத்தில் ஆரம்பக் கல்­வியைத் தொடர்ந்து பண்­டா­ர­வளை சென் ஜோசப் கல்­லூ­ரியில் எனது உயர்­த­ரத்தை முடித்து யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் 1982ஆம் ஆண்டு மிகவும் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் எனது இளமாணி கல்­வியை தொடர்ந்தேன், அதன் பிறகு கொழும்பு பல்­கலைக் கழ­கத்தில் முது­மாணி பட்­டப்­ப­டிப்பை துறைசார் நிபு­ணத்­துவம் மிக்­க­தாக பெறக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­பட்­டது. தற்­போது நான் உணர்­வது கஷ்­ட­மான காலத்தில் படித்­தி­ருந்­தாலும் என்னோடு படித்த யாவரும் ஏதோ ஒரு அரச துறை உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக இருக்­கின்­றனர். கடி­னத்தை  பொருட்­ப­டுத்­தாமல் படித்­ததன் பயனே இந்த முன்­னேற்றம்.   

கேள்வி: இலங்­கையின் அண்­மைய அர­சியல் மாற்­றங்கள் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­ட­னான உறவில் எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது? 

பதில் : இலங்­கையில் ஏற்­பட்­டு­வரும் உள்­நாட்டு விட­யங்கள் நேர­டி­யாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை பாதிக்­கக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் மிகவும் குறை­வா­கவே இருக்­கின்­றன. ஆனால், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தோடு, இலங்­கைக்கு உள்ள உற­வு­களின் அடிப்­ப­டையில் தற்­போது விசேட வர்த்­தக சலு­கை­கைகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் சலு­கை­களை பெறு­வ­தற்கு இய­லு­மா­ன­வ­ரையில் இலங்­கையின் இறை­யாண்­மையை பாதிக்­காத வகையில் இலங்கை மக்­க­ளுக்கு என்ன தேவையோ அதற்­கேற்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான திட்­ட­மி­டல்­க­ளு­ட­னான அறி­வு­ரை­களை ஏற்று செயற்­பட்டு வரு­கின்றோம்.

கேள்வி: கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­குதல் சம்­பவம் குறித்த உங்­களின் பார்வை எவ்­வா­றுள்­ளது?

பதில் : இலங்­கையில் நாம் எப்­போதும் ஒரு சமா­தானம் மிக்க சமு­தா­யத்தை உரு­வாக்கி பேணவே நாம் தொழிற்­பட்டு கொண்­டி­ருக்­கின்றோம்.

  அவ்­வா­றான நிலையில் அண்­மையில் ஏற்­பட்ட தாக்­குதல் சம்­ப­வ­மா­னது ஒரு சமு­தா­யத்தில் உள்ள உணர்வை பிர­தி­ப­லிப்­ப­தன்று, இது ஒரு சில நபர்­களால் நடத்­தப்­பட்­ட­தாகும், ஆகையால் பலர் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் நபர்கள் சார்ந்த சமூ­கங்கள் பாதிப்­ப­டையும் நிலை­மைகள் ஏற்­ப­டுத்த கூடா­த­வை­யாகும்.

எங்­க­ளு­டைய கண்­ணோட்­டத்தில் எதை செய்ய தவ­றினோம், எவ்­வா­றான கார­ணிகள் அவர்­களை தூண்­டின என்­பது பற்றி ஒவ்­வொன்­றாக ஆரா­ய­வேண்டும். அத்­தோடு, நாட்டின் அடுத்­த­கட்ட பாது­காப்பு தொடர்­பான விட­யங்­களை கவனம் கொள்ள வேண்டும். இது ஒரே­நாளில் சிறு கும்­பலால் செய்­யப்­பட்ட தாக்­குதல் அல்ல,  ஆன்­மிக ரீதி­யாக மேற்­கொண்ட தாக்­கு­த­லாக கூறி­னாலும் நாம் அவ்­வாறு பார்க்­க­வில்லை. எங்­க­ளு­டைய கட­மை­களை சரி­வர செய்­யா­மையே இவ்­வா­றான தாக்­குதல் இடம்­பெற வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இனி­வரும் காலத்­தி­லா­வது இவ்­வா­றான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெ­றாத வண்ணம் அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

கேள்விஇந்த தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில், இலங்­கையின் சுற்­று­லாத்­துறை பாரிய சவாலை எதிர்­நோக்­கி­யுள்­ளதே ? 

பதில் : இந்த தாக்­குதல் சம்­பவம் உயிரிழப்புகளையும்  தாண்டி தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளது.   சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இச்சூழல் உருவாக பிரதான காரணம் நாட்டில் பாதுகாப்பு பற்றாக்குறை இருப்பதாக வெளிநாட்டவர்கள் உணர்ந்தமையாகும். முதலில் இந்த எண்ணவோட்டத்தை மாற்றியமைக்கும் வரையில் இந்த பின்னடைவு நிலை தொடரும்.

இலங்கை மட்டுமன்றி, மேலைத்தேய நாடுகளிலும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலை இலங்கை மட்டு மல்லாது, வேறு எந்தவொரு அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில் இடம்பெற்றிருந்தாலும் இதே நிலைமைதான், காரணம் நாம் பொருளாதாரத்தை மேம்படுத்த மற்றைய நாடுகளை சார்ந்துள்ளவர்களாக இருக்கின்றோம். ஆகவே, சுற்றுலாத்துறையை மீள்கட்டமைக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இவை சாத்தியப்படக்கூடிய விடயங்களாகும்.

அந்தவகையில் அண்மையில் பதவியேற்றுள்ள 14 தூதுவர்களும் இனிமேல் இவ்வாறானதொரு தாக்குதல் சம்பவம் இலங்கையில் இடம்பெறாது என வெளிநாடுகளுக்கு உறுதியளிக்கவேண்டிய கடப்பாட்டிலுள்ளோம். இதனை வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்து சுற்றுலாத்துறையை முன்பிருந்த நிலையிலிருந்து மென்மேலும் முன்னேற்ற அரசாங்கமானது பல்வேறுபட்ட செயற்திட்டங்களை வேகமாக முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது.

நேர்காணல்: செ. லோகேஸ்வரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04