எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக நம்பத் தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அதேவேளை இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி தொடர்பிலும் சில அமைச்சர்கள், பிரதி, ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பிலும்  நாட்டுக்குள் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே, அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரச உயர் மட்டம் தீர்மானித்திருப்பதாகவும் அறியவருகிறது.

அதேவேளை இ.தொ.கா. பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்தோடு வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கு முக்கிய அமைச்சர் பதவியொன்று வழங்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.  

புதியவர்கள் ஓரிருவருக்கும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு  காலி கூட்டத்திற்கு கலந்து கொள்ளாதவர்கள் கிருலப்பனைக் கூட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் களை எடுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இதேவேளை காலியில் இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான மே தினக் கூட்டத்தில்  இ.தொ.கா.வின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் விசேட ஹெலிகொப்டர் மூலம் காலி கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.