32 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர் உள்ளக பொறிமுறை தயாராகுமா?

Published By: Raam

03 May, 2016 | 07:50 AM
image

அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை   தீர்மானிப்பதற்கான  நேருக்கு   நேர் கலந்துரையாடல்கள் ஜூன் மாதம் நடுப்பகுதியிலேயே   ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  ஜூன் மாதம்  13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில்  உள்ளக விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவத்தை  முன்வைக்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

மாறாக  32 ஆவது கூட்டத்  தொடரில்  இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள உயர்மட்ட பிரதிநிதிகள்  உள்ளக விசாரணை பொறிமுறையை  நிறுவுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும்  நடவடிக்கைகள்  தொடர்பாகவே  விளக்கமளிப்பார்கள் என  எதிர்பார்க்கப்படுகின்றது. 

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள  உள்ளக விசாரணைப் பொறிமுறையின்  இறுதிவடிவமானது விரைவில் தயாராகுமென தெரிவிக்கப்படுகிறது.  தற்போது மக்களிடம் எழுத்துமூல  சமர்ப்பணங்களை கோரியுள்ள   நல்லிணக்கம் தொடர்பான விசேட  செயலணி ஜூன் மாத நடுப்பகுதியிலேயே மக்களிடம் நேருக்கு நேர் கருத்துக்களை பெறும்  வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக  வெ ளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.  

அந்தவகையில் பார்க்கும்போது மனித உரிமை பேரவையின்  32 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும்போது  இலங்கையினால்  உள்ள விசாரணை பொறிமுறையின் வடிவத்தை தயாரிக்க முடியாமல் போய்விடும் என    எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அரசாங்கம்  அந்த நேரத்தில் உள்ளக ரீதியில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்  தொடர்பில் சர்வதேச சமூகத்தை  தெளிவுபடுத்தும் என  கருதப்படுகின்றது. 

இதேவேளை  ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம்  13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரி்ல்  கலந்துகொள்வதற்கு  அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழு  தயாராகிவருவதாகவும்  தகவல்கள் தெரிவித்தன. 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால்  அரசாங்கம் உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

குறிப்பாக  32 ஆவது கூட்டத் தொடரில்   இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறை   தொடர்பான வாய்மூல மதிப்பீட்டு அறிக்கையை   ஐக்கிய நாடுகள் மனித  உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன்  வெளியிடவுள்ளார்.    

 கடந்த  பெப்ரவரிமாதம் இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசைன்  கடந்த 10 ஆம் திகதி வெளியிட்ட  ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த அறிக்கையில்   இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார். 

 மேலும் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முடிவெடுப்பது இலங்கையினுடைய  தீர்மானமாகும் என்று  வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17