ராஜிதவுக்கு  எந்த  அடிப்படையில்  உலக  சுகாதார  நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு  உப  தலைவர்  பதவி  ?  : அரச  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம் 

Published By: R. Kalaichelvan

22 Jun, 2019 | 05:38 PM
image

(ஆர்.விதுஷா)

உலக  சுகாதார நிறுவனத்தின்  நிறைவெற்று குழுவின்  பிரதித்தலைவர்  பதவியை  சுகாதார ,சுதேச மருத்தவ  அமைச்சர்  ராஜித சேனாரத்ன  சுய இலாபத்திற்காக தவறாக  பயன்படுத்துவதாக  குற்றஞ்சாட்டியிருக்கும்  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்   எந்த  அடிப்படையில்  அவருக்கு அந்த பதவி  வழங்கப்பட்டது  என்பது   தொடர்பில்  தெளிவுபடுத்துமாறு  அந்த  நிறுவனத்திடம்  கேட்டிருக்கின்றது.   

இது  தொடர்பில் மகஜரொன்றை கொழும்பிலுள்ள உலக சுகாதார  நிறுவனத்தின் வதிவிட  பிரதிநிதி டாக்டர் ராசியா  பென்ட்சேயிடம்  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர்  வைத்தியர்  ஹரித  அளுத்கே  தலைமையிலான குழுவினர்   கையளித்துள்ளனர். 

அமைச்சர் சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட அந்த பதவி தொடர்பில் தங்களால் எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு  சாத்தியமான  அளவு  விரைவில் விளக்கத்தை  தருமாறு  வதிவிட பிரதிநிதியிடம்  வேண்டுகோள்விடுத்திருக்கும்  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்  அவரை  சந்திப்பதற்கு தங்களது  பிரதிநிதிகளுக்கு  நேரம்  ஒதுக்கித்தருமாறு  கேட்டிருக்கின்றனர்.  

இந்த மகஜரின்  பிரதிகள்  ஜனாதிபதி  செயலாளர், பிரதமரின்  செயலாளர் , சுகாதார  செயலாளர் ,சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம்  மற்றும்  இலங்கையில் உள்ள  துறைசார் நிபுணத்துவ  கல்லூரிகளின்  செயலாளர்களுக்கும்  அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.  

மகஜரில் கிளப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு உலக  சுகாதார  நிறுவனத்தின் வதிவிடபிரதிநிதி உரிய பதிலை தர தவறினால் அது குறித்து  ஜெனிவாவிலுள்ள  உலக  சுகாதார  நிறுவனத்தின்  தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்படும்  என்று  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர்  வைத்தியர் அளுத்கே  இலங்கைக்கான உலக  சுகாதார  ஸ்தாபனத்தின்  காரியாலயத்திற்கு  முன்பாக  ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01