இதய வால்வு பாதிப்பிற்கான சிகிச்சை

Published By: Digital Desk 4

22 Jun, 2019 | 05:37 PM
image

தெற்காசியா முழுவதும் இன்றைய திகதியில்  ஆயிரத்திற்கு எட்டு குழந்தைகள் பிறக்கும்போதே இதயத்தில் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். அதேபோல் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களின் பிள்ளைகளில் மூன்று வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளிடம் ரூமாட்டிக் இதய வால்வு பாதிப்பு நோய் அதிக அளவில் காணப்படுகிறது.


இதயத்தில் பொதுவாக நான்கு அறைகள் உண்டு. இந்த நான்கு அறைகளில் இரத்தவோட்டம் என்பது இயல்பாக நடைபெற வேண்டும். இந்த நான்கு அறைகளையும் பிரிக்கக் கூடிய வால்வுகள் எனப்படும் சேம்பர்ஸ் இருக்கின்றன. இந்த நான்கு வால்வுகளில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது நான்கிலோ பாதிப்புகள் ஏற்படலாம். 

இதன் காரணமாக இதயத்தின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு வரக்கூடிய நோயிற்கு ரூமாட்டீக் இதய வால்பு நோய் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இது பாக்டீரியா தொற்றால் வரக்கூடும். சிறிய வயதிலேயே தொண்டை வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் இருந்தால், அதனுடைய எதிர் விளைவுகளாக இதயத்தில் உள்ள இந்த வால்வுகளில் எதிரொலிக்கும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, இத்தகைய வால்வுகளை பாக்டீரியா எனக்கருதி தாக்கத் தொடங்குவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகின்றன. 

அதேபோல் சிலருக்கு பிறவியிலேயே இந்த நான்கு வால்வுகளில் ஏதேனும் ஒரு வால்வில் குறைபாடு இருக்கலாம். இதன் காரணமாகவும் ருமாட்டிக் இதய பாதிப்பு ஏற்படக்கூடும். வயது ஆக ஆக முதுமையிலும் இத்தகைய வால்வுகள் தளர்ச்சி அடையத் தொடங்கும். அதன் காரணமாகவும் இதய வால்வுகள் பாதிக்கப்படக்கூடும்.

இதய வால்வுகள் பாதிக்கப்படும்போது இந்த வால்வுகள் சுருங்கி விடக்கூடும் அல்லது இந்த வால்வுகளின் சுவர்கள் தடித்து விடும். இதன் காரணமாக இரத்தவோட்டத்தில் சீரற்ற தன்மை ஏற்பட்டு, இரத்தக் கசிவு அல்லது வால்வு பலவீனமாகும். 

அதாவது இதயத்திற்கு செல்ல வேண்டிய நல்ல இரத்தமும், இதயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய அசுத்த இரத்தமும் ஒன்று சேரலாம் அல்லது வெளியேறுவதில் ஏதேனும் இடையூறு ஏற்படலாம். இதன் காரணமாக இதய வால்வுகள் பாதிப்படையும். இதற்கு உரிய தருணத்தில் இதய வால்வு மாற்றுசத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். 

டொக்டர் ஸ்ரீநாத்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29