கொழும்பு நகர் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வீதிகளில் கடந்த 4 நாட்களில் குறித்த போக்குவரத்து விதிகளை மீறிய 2,200 இற்கும் மேற்பட்ட வாகனச் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 150 சாரதிகளுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.