தீர்வினை கொண்டு வந்தவர்கள் மக்களின் எதிர்ப்பினால் திரும்பியோட்டம் - கல்முனையில் பதற்றம்!

Published By: Vishnu

22 Jun, 2019 | 11:05 AM
image

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரினால் வழங்கப்பட்ட தீர்வு பொதிக்கு உண்ணாவிரதத்தில் ஈடபட்டுள்ளோரும் மக்களும் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டதனையடுத்து  பொதியினை கொண்டுவந்தவர்கள் தப்பியோட்டியுள்ளதுடன் தீர்வுவரும் வரை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை வடக்கு தமிழ்பிரிவு  பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும்  சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக இன்று ஐந்தாம் நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இன்று பி.ப அமைச்சர் மனோகணேசன், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அமைச்சர் தயாகமகே ஆகியோர் பிரதமர் தலைமையில் தமிழத்தேசியக் கூட்டமைப்புடனான கலந்துரையாடலின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்வினை அறிவிப்பதற்காக சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்

இதன் போது முதலில் மனோகணேசன் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய பின்னர்  தாங்கள் கொண்டுவந்திருக்கும் தீர்வினை சுமந்திரன் அவர்கள் அறிவிப்பார்  என தெரிவித்திருந்தார் இதற்கமைவாக சுமந்திரன் தீர்வினை அறிவித்திருந்தார்.  

அதாவது இப்பிரதேச செயலகம் எற்கனவே தரமுயர்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்தாகவும் இதற்கான பூரண அதிகாரத்தினை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கள் வழங்குவதாக பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளதாகவும் இதற்கான வேலைகள் எற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குண்டுதாக்கதலினால் இது தாமதடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர் இவ்வாறு தீர்வினை அறிவித்துக் கொண்டிருக்கும் போதே  மகளின் எதிர்ப்பலைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மூன்று மாத கால அவகாசம் கோரியபோது எதிர்ப்பானது பலமடங்கு அதிகரித்தது இந்த தீர்வில் எந்த விடயமும் இல்லை எது எம்மை ஏமாற்றி காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடாகும் இதற்க சுமந்திரன் துணைபோயுள்ளார் இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம், ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து சுமாந்திரன் இடத்தினை விட்டு வெளியேறாதபடி மக்கள் ஒன்று கூடி பலதரப்பட்ட வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட வண்ணம் ஆவேசத்துடன் காணப்பட்டனர்.

 இதனைத் தொடர்ந்து பொலிசார்  பாதுகாப்படன் அவரின் வாகனத்தில் ஏற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது கதிரை, பாதணி போன்ற வற்றினால் வீசி வானத்தை வாகனத்தை நோக்கி சென்றனர் இதனைத் தொடர்ந்து பலத்த சிரமத்தின் மத்தியில் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார், இதனையடுத்த மனோகணேசனும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். 

தயாகமகே மக்களிடம் சமாதானம் கூற முனைந்தபோது மகக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை அவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தீர்வுவரும் வரைபோராட்டம் தொடருமென போராட்டக்கார்கள் அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32