பொது மக்களின் வேண்டுகோளையடுத்து கனரக வாகனங்களுக்குத் தடை

Published By: R. Kalaichelvan

21 Jun, 2019 | 05:56 PM
image

யாழ். நகரை அண்டிய கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள கன்னாதிட்டி ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு யாழ். மாநகர முதல்வரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள சில தனியார் வியாபார நிறுவனங்கள் தமது பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக கன்னாதிட்டி ஒழுங்கைகளைப் பயன்படுத்தி வந்ததனால் அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர். வீதிகளின் அளவை விடப் பெரிய வாகனங்களில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதனால் வீதி இடியுண்டு போனதோடு, வீதியோரமிருந்த வாய்க்கால்களும் முற்றாக உடைந்து போயிருந்தன.

 

இதனால் பொது மக்களிடமிருந்து யாழ். மாநகர உறுப்பினருக்கூடாக யாழ். மாநகர முதல்வருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, குறிப்பிட்ட இரு ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்வதைத் தடை செய்யும் வகையில் மாநகர முதல்வரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39