உரிய முறையில் பதிலளிக்காவிட்டால் குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் - கிரியெல்ல

Published By: Vishnu

21 Jun, 2019 | 04:16 PM
image

(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசீம் ­)

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் முன்வைக்கும் வாய்மூல வினாக்களுக்கு அமைச்சர்கள் உரிய முறையில் பதிலகிக்காவிடத்து அவர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியும்  குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபை அமர்வுகளின்போது 27/2 இன் கீழ் விசேட கூற்றை எழுப்பிய ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக தான் இதற்கு முன்னர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னமும் பதில் வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அனுரகுமார எம்.பி கூறியதானது, 

சபாநாயகர் அவர்களே நீங்கள் இந்த சபைக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்குறீர்கள். கடந்த பாராளுமன்ற அமர்வின் போது சமுர்த்தி குறித்து கேள்வி எழுப்பினேன். இந்த வாரம் அதற்கான பதிலை கூறுவதாக தெரிவித்தீர்கள். இந்த வாரம் பதில் தரவில்லை. கொழும்பு கிழக்கு துரையடி குறித்து கேள்வி எழுப்பினேன். மூன்று வாரங்கள் கடந்தும் இன்றுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். ஆனால் பதில் தருவதில்லை. மக்கள் தொடர்புபட்ட கேள்விகளை கேட்டாலும் அவர்கள் பதில் தெரிவிப்பதில்லை. 

சபை முதல்வர்:- உங்களின் பிரச்சினை எனக்கு விளங்குகின்றது. இந்த விடயங்களை நான் உரிய அமைச்சர்களுக்கு தெரிவித்துள்ளேன். தாய கமகே அமைச்சர் இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கவேண்டியுள்ளது. நான் நாளாந்தம் நினைவு படுத்தினேன். இவர்கள் தான் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். 

அனுரகுமார:- நான் எனது பிரச்சினையை கூறினால். சபை முதல்வர் அவரரது பிரச்சினையை என்னிடம் கூறுகின்றார். 

சபை முதல்வர்:- உங்களால் அவர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும். அவர்கள் சபையை தவறாக வழிநடத்த முயற்சித்தால் சபாநாயகர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும், நீங்கள் அதனை செய்ய முடியும். 

அனுரகுமார:- உங்களின் நெருக்கடியான நிலைமைகள் எனக்கு விளங்குகின்றது. வலியுறுத்தல் இருந்தும் அமைச்சர்கள் பொறுப்புடன் நடந்துகொள்லாமை  பிரச்சினையான விடயம். 

சபை முதல்வர்:- அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் சபாநாயகர், பிரதி சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம். 

பிரதி சபாநாயகர் :- நான் உரிய நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04