ராஜிதவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுயாதீனமான முறையில் விசாரிக்க வேண்டும் - ரமேஷ் பத்திரன 

Published By: R. Kalaichelvan

21 Jun, 2019 | 03:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு  எதிரான முன்வைக்கப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்கள் சுயாதீனமான முறையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  இக்குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை  அரசாங்க தரப்பில் சுயாதீன ஆணைக்குழுக்களே  வெளிப்படுத்தியுள்ளது. 

இவருக்கு எதிராக  தற்போது போராட்டங்களை முன்னெடுக்கும்  அமைப்புகளுக்கு   முழுமையான ஆதரவு  வழங்குவோம் என பாராளுமன்ற  உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சிற்கு சொந்தமான வாகனங்களை  சுகாதார அமைச்சர் தமது  உறவினர்களுக்கும், சுய தேவைகளுக்காகவும் முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு 24  அரச வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன. 03  நவீன சொகுசு  மோட்டார் வாகனங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது. இத்துடன்   குறித்த 24  வாகனங்களும் எவரது  பொறுப்பின் கீழ் காணப்படுகின்றது என்பதும்  இதுவரையில்   அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை.

சயிட்டம்  பிரச்சினையினை தொடர்ந்து  நெவில் பிரானாந்து  தனியார் வைத்தியசாலையினை அரசுக்கு சொந்தமாக்குவதாக குறிப்பிட்ப்பட்டது. ஆனால் இதுவரையில்  குறித்த வைத்தியசாலையினை  அரசுடைமையாக்கவில்லை. மாறாக  தனியார் வைத்திய சாலைக்கு  சுகாதார அமைச்சின்    ஊடாக  ஐந்து பில்லயன்  நிதி  மாத தவணையாகவும், வருட தவணையாகவும் செலுத்தப்பட்டுள்ளமை  தேசிய நிதி மோசடியாகவே கருதப்படும்.

அத்துடன்   சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தமக்கு நெருக்கமான   மருந்துற்பத்தி நிறுவனங்களில் இருந்து தரமற்ற  மருந்துகளை கொள்னவு செய்தமையின் காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலடி நோய்தாக்கங்களுக்குள்ளாகிள்ளார்கள் இதனையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.   

சுகாதார அமைச்சில் காணப்படும் நவீன  இயந்திரங்களும்   முறைகேடான செயற்பாடுகளுக்கு    பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் வருடத்திற்கு மாத்திரம் 10 கோடி அரச நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்  அனைத்திற்கும்  தகுந்த ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆகவே முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு   சுகாதார அமைச்சர்  சட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02