திருகோணமலையில் 58 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

Published By: Daya

21 Jun, 2019 | 04:00 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 58 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஏ. ஜே. எம். சிப்லி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு ஒழுங்கமைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை திருகோண மலையிலுள்ள கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் காச நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கிண்ணியா தள வைத்தியசாலை, மூதூர் தள வைத்தியசாலை மற்றும் கந்தளாய் தள வைத்தியசாலைகளில் சளி சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.

செல்வநாயகபுரம், தோப்பூர், கோமரங்கடவல போன்ற பகுதிகளில் சளி சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை இரண்டு கிழமைகளுக்கு மேல் இருமல் மாலை நேரங்களில் காய்ச்சல், பசியின்மை, நிறை குறைவு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சளி பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு 136 காசநோய் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலமும் 58 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஏ. ஜே. எம். சிப்லி மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29