ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்கள்  : சீனாவுக்கு ஒரு அவமதிப்பு

Published By: R. Kalaichelvan

21 Jun, 2019 | 03:47 PM
image

சீனாவின் செல்வச்செழிப்புடைய காலனியாக நீண்டகாலமாக நோக்கப்படும் ஹொங்கொங் திடீரென்று கடந்த இரு வாரங்களாக அதன் சுதந்திர எண்ணங்களை  உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டியிருக்கிறது.  

குற்றச்செயல் சந்தேகநபர்களை சீனப்பெருநிலப்பரப்புக்கு நாடுகடத்துவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய உத்தேச சட்டமொன்றுக்கு எதிராக முதலில் தொடங்கிய  ஆர்ப்பாட்டங்கள் பிறகு  பிரமாண்டமான சிவில் ஒத்துழையாமை இயக்கமாக விஸ்வரூபம் எடுத்தததைக் காணக்கூடியதாக இருந்தது. 

சுமார் 20 இலட்சம் மக்கள் கலந்துகொண்டதாக மதிப்பிடப்படும் கடைசி ஆர்ப்பாட்டம் இந்த நகர அரசின் வரலாற்றில் மிகப்பெரியது என்று வர்ணிக்கப்படுகிறது.

 உலகின் மிகவும் பலம்பொருந்திய ஒரு கட்சி ஆட்சி முறைமைக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்கள் ஹொங்கொங்கில் முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைப் போன்று விரைவாகவே பொருட்படுத்தப்படாமல் போய்விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆர்ப்பாட்டங்களின் உக்கிரம் நாடுகடத்தல் சட்டத்தை மீளப்பெறவேண்டிய நிர்ப்பந்தத்தை  ஹொங்கொங் நிருவாகத்துக்கு கொடுத்தது.ஆனால், அந்த நகர அரசின் ஆட்சியாளரான காறீ லாமைப் பதவியில் இருந்து இறங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்க்காரர்கள் கோரியபோதிலும் அவர் இதுவரையில்  அவ்வாறு செய்ய மறுத்துவருகிறார்.

ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்கள் சீனத்தலைவர் சி ஜின்பிங்கிற்கு பெரிய அவமதிப்பாக அமைந்துவிட்டதாக ஏற்கெனவே வர்ணிக்கபபடுகின்றது.நாடுகடத்தல் சட்டத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு முற்றுமுழுதாக பெய்ஜிங் பொறுப்பல்ல என்கின்ற அதேவேளை, ஆனால், சீன அரசாங்கம் ஹொங்கொங்கின் ஆட்சியாளருக்கும் சட்டமூலத்துக்கும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருந்தது.

ஹொங்கொங்கின் தனியானதும் கூடுதலான அளவுக்கு தாராளப்போக்குடையதுமான அரசியல் மற்றும் சமூக அந்தஸ்தை பல வருடங்களாக சீன அரசாங்கம் படிப்படியாக வெட்டிக்குறைத்து வந்திருக்கிறது.கம்யூனிஸ்ட்  ஆட்சியை  கண்டன விமர்சனம் செய்தமைக்காக  ஹொங்கொங்கில் இருந்து கடத்திச்செல்லப்பட்டவர்ள்  பின்னர் சீனாவில் கைதிகளாக தலைகாட்டிய ஏராளமான சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றிருந்தன.ஹொங்கொங்கின் சட்டவாக்கசபை பெய்ஜிங்கிற்கு ஆதரவான வர்த்தகப் பிரமுகர்களையும் உயரதிகாரிகளையும் கொண்ட ஒரு அமைப்பு என்பதற்கு அப்பால் வேறு எதுவுமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

 ஹொங்கொங்கின் நிதித்துறைச் சுதந்திரம் பேணப்பட்டது.ஆனால், அதற்கு முக்கிய காரணம் இன்றுவரை சீனப்பொருளாதாரத்துக்கான வெளி மூலதனத்தின் வருகைக்கு பிரதான வாயிலாக அது விளங்குவதேயாகும்.ஹொங்கொங் தற்போது அனுபவிக்கின்ற நிதித்துறை அந்தஸ்தை தொடர்ந்தும் அனுமதிப்பது விவேகமானதாக இருக்குமா என்பதை அமெரிக்க காங்கிரஸ் இப்போது மீளாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹொங்கொங்கை கட்டப்படுத்துவதில் சீனா கொண்டிருக்கும் செல்வாக்கின காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாடு கடத்தல் சட்டத்தின் கதி எதுவாக இருந்தாலும்,  இந்த  ஆர்ப்பாட்டங்கள் ஹொங்கொங்கிலோ அல்லது சீனாவிலோ எந்தவிதமான அடிப்படை மாற்றத்தையும் கொண்டுவருவது சாத்தியமேயில்லை.இது துரதிர்ஷ்டவசமானது.ஆனால், ஆனால், அவை போதுமானளவு பொருளாதார சுபிட்சத்துடன் ஆட்சிசெய்யப்பட்டால் சீன வம்சாவளி மக்கள் தங்களது  அரசியல் உரிமைகள் பற்றி பெரிதாக அக்கறை காட்டமாட்டார்கள் என்ற  மாயையில் இருக்கின்ற பெய்ஜிங்கிற்கும் உலகிற்கும் ஒரு உறைப்பான செய்தியை உணர்த்தியிருக்கின்றன.

ஹொங்கொங்கின் நிகழ்வுகளில் இருந்து தாய்வானின் சீன எதிர்ப்பு அரசியல் இயக்கம் ஊக்கத்தை பெற்றிருக்கும்.இதற்கான காரணத்தை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்கமுடியாது. சீனாவில் ஜனநாயகம் தலைமறைவாகவே இருந்துவருகிறது.

ஆனால்,  பிரதிநிதித்துவ அரசாங்கம் அல்லது அரசியலமைப்புச் சுதந்திரம்  சீனாவின் மக்களுக்கும் அதன் பிராந்தியத்துக்கும் முற்றுமுழுதாக  அந்நியமானவை என்று பெய்ஜிங் எண்ணிவிடக்கூடாது என்ற செய்தியை  ஹொங்கொங்  ஆர்ப்பாட்டங்கள் சொல்லியிருக்கின்றன.சீனப்பெருநிலப்பரப்பில்  மாற்றுக்கருத்துகளுக்கும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் சி ஜின்பிங்கும் அவரது பரிவாரங்களும்  கதவையடைத்திருக்கும் ஒரு நேரத்தில், அந்த செய்தீ சீனத்தலைமைத்துவத்துக்கு ஒரளவு சந்தேகத்தையும் அச்சத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

( இந்துஸ்தான் ரைம்ஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13