ராமேஸ்வரத்தை அண்டிய நாட்டுப் படகுகளில் அதிகாரிகள் ஆய்வு

Published By: Priyatharshan

02 May, 2016 | 03:45 PM
image

( ஆ. பிரபுராவ் )

ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளிலுள்ள நாட்டுப் படகுகளை மீன் பிடித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் மே மாதம் 29 திகதி வரையில் மீன் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகுகள் மீன்பிடிக்க அரசு தடைவிதித்து வருகிறது.

இக்காலங்களில் நாட்டுப்படகுகள் ஆய்வுக்கு  உட்படுத்தப்படும். இதேபோல இன்று ராமேஸ்வரம் துறைமுகம், சங்குமால் கடற்கரை, முகுந்தராயர்சத்திரம், தனுஷ்கோடி, தங்கச்சிடம்  குந்துகால், பாறையடி, சேராங்கோட்டை  மற்றும் பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீன்துறை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர்  படகுகளின் இயந்திர திறன், பாதுகாப்பு, நீளம் அகலம் மற்றும் படகுகளின் தன்மை படகுளின் ஆவணங்கள் மானிய டீசல் அட்டைகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடி வலைகள்  உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

படகுளின் ஆவணங்கள் மற்றும் மானிய டீசல் முறைகேடாக பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் ஆய்வில் கண்டறியப்பட்டால் படகு உரிமையாhள்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கையும் தொடரும் எனவும் அதிகாரிகளின் சோதனைக்கு படகு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மீன்பிடித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21