அரசாங்க பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி - செங்கோட்டையன்

Published By: Daya

21 Jun, 2019 | 02:13 PM
image

தமிழகத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

“ அரசாங்க பாடசாலைகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை ஏதுமில்லை. மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ளவேண்டும். தமிழகத்தில் அரசாங்க பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாள் ஒரு வகுப்பறையில் யோகா பயிற்சி  வழங்குவதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதற்கான நிதிகள் ஒதுக்குவதற்கும், பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கவனசிதறலின்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது. யோகா கற்றுத் தர 13,000 பயிற்சியாளர்கள் தயாராகவுள்ளனர். அவர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். அதனை எப்படி செயற்படுத்துவது? என்பதை அரசு ஆராய்ந்து வருகிறது.” என்றார்.

முன்னதாக சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மாநில பா.ஜ.க.தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47