பெல்வத்த சீனித் தொழிற்சாலையின் நிர்வாகக் கட்டமைப்பில் எம்மாற்றமும் மேற்கொள்ளப்படாது

Published By: J.G.Stephan

21 Jun, 2019 | 12:30 PM
image

குறைந்த செயற்பாடுள்ள தொழில் முயற்சியாளர்களை அல்லது குறைவாக பயன்படுத்தும் சொத்துக்களை கட்டியெழுப்பும் நகல் சட்டமூலம் நேற்று(20.06.2019) பாராளுமன்றத்தில் 22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்குச் சார்பாக 91 பேரும், எதிராக 69 பேரும் வாக்களித்தனர்.  இச்சட்ட மூல வாக்கெடுப்பின் போது உரையாற்றிய அமைச்சர் நவீன் திசாநாயக்க, செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலையின் நிர்வாகக் கட்டமைப்பில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தொழிற்சங்கங்களுக்கு அறிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டமூலம் இருக்கும் வரை நாட்டில் எந்தவொரு நிறுவனத்தையும் சுவீகரிக்க முடியாது என்பதால் இந்த சட்டத்தை இரத்துச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.  சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் இத்தொழிற்சாலை மூலம் பயனடைகின்றன. இதனால், அவர்களின் வாழ்வியலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த இரண்டு நிறுவனங்களும் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் திறைசேரியின் கீழ் இயங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி உரையாற்றுகையில், நாட்டிற்கு முதலீடுகளை வழங்குவதற்காக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வாரங்களில் நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. செவனகல, பெல்வத்த சீனித்தொழிற்சாலைகளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறை உபயோக சட்டமூலம் காரணமாக அன்று உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள் பாதிப்புக்கு உள்ளானதாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58