பொம்பியோவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும் ‘சோபா’வுக்கும் தொடர்பு இல்லை

Published By: J.G.Stephan

21 Jun, 2019 | 12:04 PM
image

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் மைக் பொம்­பி­யோவின் இலங்கை பயணம் ரத்துச் செய்­யப்­பட்­ட­தற்கும், ‘சோபா’ உடன்­பாட்­டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மூத்த அமெ­ரிக்க அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­யதி­யா­வுக்கு எதிர்­வரும் 24ஆம் திகதி பயணம் மேற்­கொள்ளும் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் மைக் பொம்­பியோ, இலங்­கைக்கு எதிர்­வரும் 27ஆம்  திகதி குறு­கிய பயணம் ஒன்றை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருந்தார்.

எனினும், தவிர்க்க முடி­யாத திட்­ட­மிடல் முரண்­பா­டு­களால், அவரால் இலங்­கைக்­கான பய­ணத்தை இம்­முறை மேற்­கொள்ள முடி­யாமல் போயுள்­ள­தாக கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம் அறி­வித்­தி­ருந்­தது. அமெ­ரிக்­கா­வு­ட­னான படை­களை நிலைப்­ப­டுத்தல் தொடர்­பான ‘சோபா’ உடன்­பாட்­டுக்கு, இலங்கை எதிர்க்­கட்­சிகள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன. இந்த நிலை­யி­லேயே, அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் மைக் பொம்­பி­யோவின் பயணம் ரத்துச் செய்­யப்­பட்ட அறி­விப்பு வெளி­யா­கி­யது.

இது­கு­றித்து கருத்து வெளி­யிட்ட அமெ­ரிக்க உயர் அதி­காரி ஒருவர், “பொம்­பி­யோவின் இந்தப் பய­ணத்தின் போது, ‘சோபா’ உடன்­பாடு குறித்துப் பேசத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவ­ரது இலங்கைப் பயணம் ரத்துச் செய்­யப்­பட்­ட­தற்கும், ‘சோபா’ உடன்­பாட்­டுக்கும் தொடர்பு இல்லை” என்று தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை, அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் மைக் பொம்­பியோ இலங்கை வரத் திட்­ட­மிட்­டி­ருந்தபோது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கம்­போ­டியா, லாவோ­சுக்குப் பயணம் மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருந்தார். எனினும், இந்தப் பயணம், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக, நேற்றுமுன்தினம் இரவே தமக்கு தெரியவந்தது எனவும் அந்த அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38