பாரா­ளு­மன்­றத்தில் இரு நாள் விவாதத்தை கோரு­வ­தற்கு தமிழ்க் கூட்­ட­மைப்பு தீர்­மானம்

Published By: R. Kalaichelvan

21 Jun, 2019 | 12:03 PM
image

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக புது­டில்லி செல்­வ­தற்கு முன்னர் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தாம­த­மா­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோரு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்மா­னித்­தி­ருக்­கின்­றது.

நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் இத்­த­கைய முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நடை­பெறும் பாரா­ளு­மன்றக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இந்த இரண்டு நாட் கள் விசேட விவா­தத்­துக்­கான கோரிக்­கையை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முன்­வைத்து, அதற்­கான திகதி ஒதுக்­கீட்டைப் பெற்­றுக்­கொள்­ளவும் இந்தக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு இணக்­க­மான சுமுகத் தீர்வு எட்­டு­வ­தற்கு பு­லி­களே முட்­டுக்­கட்டை என்று தென்­னி­லங்­கையால் முன்னர் திரும்பத் திரும்பக் கூறப்­பட்டு வந்­தது.

இரா­ணுவ ரீதியில் விடு­த­லைப்­பு­லிகள் முறி­ய­டிக்­கப்­பட்டு பத்து ஆண்­டுகள் கடந்து விட்­டன. ஆனால், இன்­னமும் தமி­ழரின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நீதி, நியா­ய­ மான தீர்வு காணப்­ப­டவே இல்லை. காணப்­படும் என்ற நம்­பிக்­கையும் அருகி வரு­கின்­றது. தீர்­வுக்­கான இணக்­கமும், வாய்ப்பும் இந்தப் பாரா­ளு­மன்­றத்­தி­லேயே உரு­வான பின்­னரும், அது நடை­மு­றைக்கு வராமல் போன­மைக்குக் காரணம் யாது? – என்ற கேள்­வியின் அடிப்­ப­டையில் இத்­த­கைய விசேட விவாதம் ஒன்­றுக்குக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இரா.சம்­பந்தன் கோரிக்கை விடுக்க வேண்டும் எனக்  கூட்­ட ­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முதலில் பாரா­ளு­மன்­றத்தில் இது குறித்த விசேட விவா­தத்தில் தமிழர் தரப்பின் ஆதங்­கங்கள், நீதி­யான எதிர்­பார்ப்­புகள் போன்­ற­வற்றைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது என்றும், பின்னர் அடுத்த கட்­ட­மாக, இந்­தியப் பிர­த மர் நரேந்­திர மோடி உட்­பட சர்­வ­தேச நாடு­களின் தலை­வர்கள் மற்றும் பிர­தி­நி­தி­களை நேரில், தமி­ழ­ருக்கு நீதி­யான தீர்வு வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கின்­றமை குறித்து தெளி­வு­ப­டுத்தி சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஆழ­மாகத் திருப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் இந்தக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டது.

கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான க.துரை­ரெட்­ண­சிங்கம், க.கோடீஸ்­வரன் தவிர்ந்த ஏனைய அனைத்து எம்.பி.க்­களும் பாரா­ளு­மன்றக் குழுக்­ கூட்­டத்தில் கலந்­து ­கொண்­டனர்.

இங்கு கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றமை கவலையளிக் கும் விடயமாகவுள்ளது. இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண் டும். ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடை பெறவிருப்பதனால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53