வாய்ப்பினை தக்க வைக்குமா இலங்கை?

Published By: Vishnu

21 Jun, 2019 | 11:50 AM
image

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணியை பொருத்தவரையில் இதுவரை ஐந்து போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அத்துடன் இரு போட்டிகளில் மழையால் எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது.

4 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியானது எஞ்சிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மொத்தமாக 12 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளலாம்.

எனினும் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கா நல்ல பங்களிப்பினை வழங்கி வருகின்றபோதிலும் மத்தியதர வீரர்கள் அவர்களது பங்களிப்பினை இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் உரிய வகையில் நிறைவேற்றியது கிடையாது.

குறிப்பாக அனுபமிக்க வீரர்களான குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் திஸர பெரேரா ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறுமுனையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து மிக அபாரமாக ஆடி வருகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் விளைாயடி நான்கில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தல் உள்ளது. 

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் இரண்டில் பலம்பொருந்திய அணியாக திகழும் இங்கிலாந்து அணியை இலங்கை அணி இன்று எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 6 போட்டிகளிலும் இலங்கை அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35