நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் நேற்று காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.