ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி  கோத்தபய ராஜபக்ஷவிற்கு  கிடையாது - துமிந்த   

Published By: Daya

20 Jun, 2019 | 02:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு  கிடையாது.  மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப நாட்டை ஆட்சி செய்தது போதும். இளம் தலைமுறையினருக்கும், அரசியல் புது முகங்களுக்கும்  வாய்ப்பு  வழங்கி விலகிக் கொள்வதே  கௌரவமான  செயற்பாடாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர்  துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலத்தில்  இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி  கிடையாது.  பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இவர்  அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து விட்டார் என்று குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் இதுவரையில்  இரட்டை குடியுரிமையினை இரத்து செய்தமைக்கான எவ்வித உரிய ஆவணங்களும்  சமர்ப்பிக்கடவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற் ஆட்சிகாலத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.     30 வருட கால சிவில் யுத்தமும் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது வரவேற்புக்குரியது.  இக்காலக்கட்டத்தில் இவரது குடும்ப உறுப்பினர்கள அனைவரும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் செல்வாக்கு செலுத்தினார்கள். 10வருட  ஆட்சியில் பல விடயங்கள்   நிறைவேற்றிக் கொண்டார்கள் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02