ஆஸி.யின் ஆதிக்கத்தை தகர்க்குமா பங்களாதேஷ்!

Published By: Vishnu

20 Jun, 2019 | 11:29 AM
image

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ்  அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அதில் 4 வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சிலும் வலுவான நிலையில் உள்ளது.

பங்களாதேஷ் அணி 5 போட்டியில இரண்டில் வெற்றியையும் இரண்டில் தோல்வியையும் பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத்தீவுகள் நிர்ணயித்த இமாலய வெற்றியிலக்கினை துரத்தியடித்து வியப்ப‍ை ஏற்படுத்தியது.

இந் நிலையில் இன்றைய போட்டியில் அனைத்து வகையிலும் அவுஸ்திரேலிய அணிக்கு பங்களாதேஷ் அணி சவால் விடும் என்பதில் ஐயம் இல்லை. 

நொட்டிங்கமில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் இப் போட்டி மழையால் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளன. அந்த இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35