மன அழுத்தத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா...?

Published By: Digital Desk 4

19 Jun, 2019 | 07:57 PM
image

மன அழுத்தம், மன உளைச்சல், மனச் சோர்வு போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்பதை எப்படி அறிந்து கொள்வது?

தற்போதைய சூழலில் ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு சென்று, சம்பாதித்து, வீடு திரும்பினால் தான் குடும்பத்தின் பொருளாதார நிலை சற்றே தன்னிறைவாக இருக்கும். அத்துடன் தினமும் காலையில் எழுந்து வழக்கமாக செய்யக்கூடிய பணிகளை (இல்ல பணிகள், அலுவலகப் பணிகள், உறவு மேலாண்மை, உணவு மேலாண்மை... இது போன்ற விடயங்களில் ) எல்லாம் நாளாந்தம் மேற்கொள்வது தொடர்ந்தால் நாம் இயல்பாக இருக்கிறோம் என்று கருதலாம்.

இதை தவிர்த்து காலையில் எழுந்தது முதல், இரவு உறங்கும் வரை அல்லது அடுத்த நாள் காலையில் எழுவது வரை உங்களுடைய இயல்பான நடவடிக்கையில் ஏதேனும் சிறிய அளவிலான மாற்றங்கள் இருந்தாலும், உங்களுடைய மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதாவது நீங்கள் உங்களுடைய பிள்ளைகளைப் பார்த்து காலை வணக்கம் சொல்லும் பழக்கம் இருந்து திடீரென்று இன்று ஒருநாள் காலை சொல்லாமல் இருந்தால்... அது நீங்கள் மன அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். 

சிலர் ஒருநாள் தானே என்பார்கள். மருத்துவர்களும் இதனை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவார். ஆனால் இந்த நிலை இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால்.., நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, 

அதற்கான சிகிச்சையை கட்டாயம் பெற வேண்டும். அதனைப் புறக்கணித்தால், அதன் பக்கவிளைவாக உடல் ஆரோக்கியத்தில் அல்லது உடலின் இயங்கும் ஆதார சுருதியில் மாற்றம் உருவாகும்.

அதே தருணத்தில் மனிதர்கள் என்பவர்கள் இரவில் உறங்கி, காலையில் பணியாற்றும் வகையில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் . தற்போதைய சூழலில் இதற்கு எதிரான நிலை இருப்பதால்,,பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்திற்கு எளிதாக ஆளாகிறார்கள். இவர்கள் பயோலஜிக்கல் ரிதம் என்ற உடலியக்க ஒழுங்கை மீறி செயற்படுவதால் மன சோர்விற்கு ஆளாகிறார்கள்.

உறக்கமின்மை, பசியின்மை, குடும்ப உறுப்பினர்களிடம் வழக்கமாக மேற்கொள்ளும் உறவு மேலாண்மையில் ஏற்படும் தடுமாற்றம் போன்றவற்றை இதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

தற்போதைய இளைய தலைமுறையினர், நலம்விரும்பிகள், உறவினர்கள், நட்புகள், அக்கம் பக்கம் என்ற எந்தவித சமூக உறவுகளுமின்றி தான் தனித்துவமான குடும்ப அமைப்பை உருவாக்கி வருகிறார்கள். இதுவே அவர்களின் மனச்சோர்வுக்கு தீர்வு காண்பதற்குரிய வழிகாட்டல் கிடைக்காத நிலையை தோற்றுவிக்கிறது.

டொக்டர் கண்ணன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04