கட்டுகஸ்தோட்டை, அம்பதென்ன பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை கட்டுகஸ்தோட்டை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற  பஸ்வண்டியும் கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற பஸ்வண்டியுமே இவ்வாறு மோதியுள்ளன. 

ஒரு பஸ் வண்டியை மற்றொரு பஸ் வண்டி முந்துவதற்கு எத்தனிக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து வந்த பஸ்ஸின் சாரதியை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.