நேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்!

Published By: Vishnu

19 Jun, 2019 | 12:57 PM
image

ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று மான்செஸ்டரில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டில் போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டங்களினால் அபரமாக வெற்றிபெற்றது.

இந் நிலையில் இப் போட்டியானது இங்கிலாந்து அணிக்கு மாத்திரமல்லாமல் ஐ.சி.சி.க்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேட்டியாக அமைந்துள்ளது. காரணம் இந்த ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பதிவுசெய்யபட்டிருந்த பல சாதனைகளை மாற்றியமைத்துள்ளது.

அவையாவன :

1. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்கள் 397.

கடந்த 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 417 ஓட்டத்தையும், 2007 ஆம் ஆண்டு இந்திய அணி பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ஓட்டத்தையும், 2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி அயர்லாந்துக்கு எதிராக 411 ஓட்டத்தையும், அதே ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 408 ஓட்டத்தையும், 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி கென்னியாவுக்கு எதிரான போட்டியில் 398 ஓட்டங்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் பதிவுசெய்துள்ளன.

2. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய வீரராக இயன் மோர்கன் (17 சிக்ஸர்)

கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் சர்மா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களையும், 2015 ஆம் ஆண்டு எ.பி.டி.வில்லியர்ஸ் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களையும், 2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெய்ல் சிம்பாவ்வே அணிக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விளாசியுள்ளனர்.

3. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் வேகமாக சதம் விளாசிய நான்காவது வீரராக இயன் மோர்கன்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அயர்லாந்து அணியின் கேவின் ஒ பிரைய்ன் இங்கிலாந்து அணியுடான போட்டியில் 50 பந்துகளிலும், 2015 ஆம் ஆண்டு மெக்ஸ்வெல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளிலும், எ.பி.டி.வில்லியர்ஸ் அதே ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளிலும் சர்வதேச ஒருநாள் உலகக கிண்ண கிரிக்கெட் அரங்கில் ஏற்கனவே சதத்தை வேகமாக பூர்த்தி செய்துள்ளனர். 

4. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய அணியாக இங்கிலாந்து (25).

இங்கிலாந்து அணி ஏற்கனவே 24 ஆறு ஓட்டங்களை விளாசியுள்ள நிலையில் அந்த சாதனையை மீண்டும் முறியடித்துள்ளது.

5. சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய ஓட்டங்களை வழங்கிய மூன்றாவது வீரராக ரஷித் கான் - 0-110 (9).

கடந்த 1983 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியின் மார்டின் ஸ்னேடென் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 12 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 105 ஓட்டங்களையும், 2015 ஆம் ஆண்டு ஜோசன் ஹோல்டர் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 10 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 104 ஓட்டங்களையும், அதே ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் டூவ்லத் சத்ரான் அவுஸ்திரேலிய அணியுடான போட்டியில் 101 ஓட்டங்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் அரங்கில் வழங்கியுள்ளனர்.

6. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்ஸர்களை வழங்கிய வீரராக ரஷித் கான் (11 சிக்ஸர்).

7. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மான்செஸ்டர் - ஒல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த இங்கிலாந்து (397-6).

கடந்த 16 ஆம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்களையும், 2006 ஆம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக 318 ஓட்டங்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பதிவுசெய்துள்ளன. 

8. சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிகூடிய சிக்ஸர்கள் பதிவுசெய்யப்பட்ட போட்டியாக நேற்றைய போட்டி (33).

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இங்கிலந்து - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 24 சிக்ஸர்கள் பெறப்பட்டது.

9. சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் இணைப்பாட்டமாக அதிகூடிய ஓட்டங்களை பதிவுசெய்த ரூட் - மோர்கன் (189)

கடந்த 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டென்னிஸ் அமிஸ் - கீத் பிளெட்சர் இருவரும் இணைந்து இணைப்பாட்டமாக 176 ஓட்டத்தையும், 2015 ஆம் ஆண்டு மெயின் அலி - இயன் பெல் இருவரம் இணைந்து இணைப்பாட்டமாக 172 ஓட்டத்தையும் சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே பதிவுசெய்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்கானுடனான கிரிக்கெட் சுற்றுப்போட்டியை இரத்துச் செய்தது...

2024-03-19 16:56:51
news-image

தலிபானின் ஆட்சியின் கீழ் மகளிர் உரிமை...

2024-03-19 16:54:41
news-image

தென் ஆபிரிக்காவுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட்...

2024-03-19 15:26:44
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி...

2024-03-19 12:05:57
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44