நியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு  சிறை தண்டனை 

Published By: Digital Desk 3

19 Jun, 2019 | 12:21 PM
image

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவம்  தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபருக்கு  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி துப்பாக்கி ஏந்திய நபர்  கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். இறுதியில், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான அவுஸ்திரேலிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப பட்டபோது அதனை பல இணையதள பயனாளர்கள் பகிர்ந்தனர். அதனை பேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்கள் தங்களது வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கின. 

இவ்வாறு நியூசிலாந்து துப்பாக்கி சூடு தாக்குதலை சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்ததாக கிரைஸ்ட்சேர்ச் பகுதியை சேர்ந்த பிலிப் ஆர்ப்ஸ் என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். 

இது குறித்த விசாரணை நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி கூறியதாவது:- 

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை குற்றவாளி பிலிப் ஆர்ப்ஸ் மனிதாபிமானம் இன்றி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து உள்ளார். 

இத்தகைய இரக்கம் அற்ற செயலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அதனை மிகவும் அருமையான காட்சி என வர்ணித்துள்ளார். இது மிகப்பெரிய குற்றம் ஆகையால், குற்றம் சாட்டப்பட்ட பிலிப் ஆர்ப்ஸ்க்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கிறேனன் என  நீதிபதி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06