தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30ற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்: நைஜீரியாவில் சம்பவம்

Published By: J.G.Stephan

19 Jun, 2019 | 10:45 AM
image

நைஜீரியாவில் உள்ள பிரபல கால்பந்தாட்ட மைதானமொன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ''கொண்டுகா'' என்ற நகரில், உள்ளூர் கால்பந்து போட்டியின் ஆட்டத்தை நேரடியாகப் பார்வையிட, நுாற்றுக்கணக்கான ரசிகர்கள், மைதானத்தில் சூழ்ந்திருந்தனர். அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி வந்த தீவிரவாதிகள் மூவர், ரசிகர்கள் நிறைந்திருந்த பகுதிக்குள் புகுந்து, தமது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

இதில், 30க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், உடல் சிதறி பலியாகியுள்ளதோடு, 

இத் தாக்குதலில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், குறித்த பகுதியில் அடிக்கடி, தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47