கூட்டணியின் வெற்றியில் மஹிந்த உறுதியாகவுள்ளார் ; ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியே - தயாசிறி

Published By: Daya

18 Jun, 2019 | 03:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பரந்துப்பட்ட கூட்டணி  வெற்றிபெறவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக உள்ளார். தற்போதைய அரசியல் களத்தில்  பல மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இறுதி தருணத்தில்  பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக  இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினரும் ,  சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான  தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

 

பொதுஜன பெரமுனவினால் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட முடியாது.  பரந்துப்பட்ட  கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில்  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகவுள்ளார்.  பரந்துப்பட்டக் கூட்டணியின் ஊடாகவே  முறையாக  அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு  தெரிவித்துள்ளார். 

 

பாராளுமன்றத்தை கலைத்து பொதுதேர்தலை நடத்த  பொதுசன அபிப்பிராயத்தை கோரவேண்டும் என  குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய நிலையில் பொதுசன அபிப்பிராயத்தை  நடத்துவதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டமுடியாது. 

பொதுசன அபிப்பிராயத்தின் பெறுபேறுகளை கொண்டு எவ்வித அதிகார பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.  பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டுமாயின்  மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவு தேவை  தற்போதை  பாராளுமன்றத்தில் ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு  எத்தரப்பினருக்கும்  கிடைக்கப்பெறாது.

பரந்துப்பட்ட கூட்டணி  வெற்றிபெறவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக உள்ளார். தற்போதைய அரசியல் களத்தில்  பல மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இறுதி தருணத்தில்  பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக  இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்.

இதனை தொடர்ந்து பொதுத்தேர்தலின் ஊடாக  பிரதமராக  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார். இதுவே நிச்சயம் இடம் பெறும் இதனை தவிர்க்க முடியாது.  தனிமனிதனின்  தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் முக்கியத் துவம் கொடுக்காமல்  அரசியல் கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு  அரசியல் ரீதியில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51