பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் பூனைகளாக மாறிய அமைச்சர்கள்..!: கெட் பில்டர்' ரால் வந்த வினை

Published By: J.G.Stephan

18 Jun, 2019 | 02:30 PM
image

பாகிஸ்­தானின் மாகாண அர­சாங்­க­மொன்றின் அமைச்­சர்கள் கூட்­ட­மொன்று பேஸ்புக் ஊடாக நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்ட சந்தர்ப்பத்தில், அமைச்­சர்கள் பூனைகள் போன்று தோற்­ற­ம­ளித்த சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­றது. 

மனி­தர்­களை பூனைகள் போன்று தோற்­ற­ம­ளிக்கச் செய்யும்  'கெட் பில்டர்' என்ற செயலி தவ­று­த­லாக அழுத்­தப்­பட்­ட­மையே இதற்­கான காரணம்.

பாகிஸ்­தானின் கைபர் பக்­துன்க்வா மாகா­ணத்தின் அமைச்­சர்கள் கூட்டம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது. இக்­கூட்டம் முழு­வ­தையும் நேர­டி­யாக பேஸ்­புக்கில் ஒளி­ப­ரப்ப ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இக்­கூட்டம் பேஸ்­புக்கில் ஒளி­ப­ரப்­பப்­பட்­ட­போது,  'கெட்' பில்டர்' தவ­று­த­லாக அழுத்­தப்­பட்­டது. இதனால், இக்­கூட்­டத்தில் கலந்து கொண்ட அமைச்­சர்கள் பூனை­க­ளாக தென்­பட்­டனர்.

இதைப் பார்த்த பலர் திகைப்­ப­டைந்த நிலையில், மேற்­படி தவறை உணர்ந்த பார்­வை­யாளர் ஒருவர், 'கெட் பில்­டரை அகற்­றுங்கள். மனி­தர்கள் பூனை­க­ளாக தென்­ப­டு­கின்­றனர்' என கொமண்ட் செய்தார்.

அதை­ய­டுத்து மேற்­படி கெட் பில்டர் அகற்­றப்­பட்­டது. எனினும், அதற்­குமுன் எடுக்­கப்­பட்ட ஸ்கிறீன் ஷொட்கள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் பரவத் தொடங்­கின. 

மேற்­படி விடயம் ஒரு மனிதத் தவறு என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானின் பி.ரி.ஐ. கட்சியைச் சேர்ந்த மாகாண தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சௌகத் யூசுப்ஸாய் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right