2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் !

Published By: Digital Desk 3

18 Jun, 2019 | 03:25 PM
image

உலக சனத்தொகை அதிகரிக்கக்கூடுமென ஐ.நா.சபை வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை - 2019 என்ற அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. எதிர்வரும் 2050 ஆம் ஆண்டில் இந்த தொகை 970 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2019 மற்றும் 2050ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவில் மக்கள்தொகை 3 கோடி அளவில் குறையும் என கூறப்படுகிறது. ஆனால், 8 நாடுகளில் மக்கள் தொகை உயர்வு வழக்கம் போலவே இருக்கும்.

இதனால் உலக மக்கள் தொகையில் பாதியளவு  இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆபிரிக்காவில் தற்போதுள்ள மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47