சர்ப்ராஸுக்கு எதிராக எழும் முன்னாள் ஜம்பவான்களின் கண்டனங்கள்!

Published By: Vishnu

18 Jun, 2019 | 12:18 PM
image

இந்தியவுடனான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஏன் இந்த அளவுக்கு மூளை இல்லாதவராக செயல்பட்டார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுடான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 89 ஓட்டத்தினால் மிக மோசமாக தோல்வியைத் தழுவியிருந்தது.

இந் நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜம்பவான்கள் பலர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

வஸிம் அக்ரம்

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் வஸிம் அக்ரம், என்னை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தேர்வு சரியாக இல்லை. உலக கிண்ண தொடருக்கு பாகிஸ்தான் அணி சரியான திட்டமிடலுடன் சென்றதாக தெரியவில்லை. வெற்றி, தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு அங்கமாகும். ஆனால் இது போல் போராடாமல் தோல்வியைத் தழுவியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

சோயிப் அக்தர்

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்,  2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி செய்த தவறை இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி செய்துள்ளது.

அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஏன் இந்த அளவுக்கு மூளை இல்லாதவராக செயல்பட்டார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சேசிங்கில் பாகிஸ்தான் அணி சிறப்பானது கிடையாது என்பதை அவர் எப்படி மறந்தார்.  நமது அணியின் பலம் பந்து வீச்சு தான் என்பது தெரியும். சர்ப்ராஸ் அஹமட் நாணய சுழற்சியில் வென்றதுமே நாம் பாதி ஆட்டத்தில் வெற்றிபெற்று விட்டோம்.

பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 260 ஓட்டங்களை பெற்றிருந்தால் கூட அந்த ஓட்டத்தை எதிரணியினர் பெறமுடியாது எமது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தியிருப்பார்கள்.

எனினும் சர்ப்ராஸ் அஹமட் களத்தடுப்பை தேர்வுசெய்து முட்டாள்தனமாக செயற்பட்டு விட்டார். ஹசன் அலி பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. சாதாரணமான பாகிஸ்தான் வீரர்களிடம் இருந்து அசாதாரணமான செயலை நாம் எதிர்பார்த்து இருக்கிறோம். அத்துடன் பயிற்சியாளர் மிக்கி ஆர்துர் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் அணியின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35