பல்­லா­யி­ரக்­க­ணக்­கான புதிய கட்­ட­டங்­களில் பிள­வுகள் ஏற்­படும் அபாயம் ; அவுஸ்­தி­ரே­லிய நிபுணர் எச்­ச­ரிக்கை

Published By: Digital Desk 4

18 Jun, 2019 | 11:58 AM
image

அவுஸ்­தி­ரே­லிய சிட்னி நக­ரிலுள்ள ஓபல் மற்றும் மஸ்கொட் கோபுர கட்­ட­டங்­களில் அண்­மையில்  பிள­வுகள் ஏற்­பட்­டமை அவ­தா­னிக்­கப் ­பட்­டுள்ள நிலையில் மேலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான  புதிய வானு­யர்ந்த கட்­ட­டங்­களில் பிள­வுகள் ஏற்­படும் அபாயம் உள்­ள­தாக  நிபுணர் ஒருவர் எச்­ச­ரித்­துள்ளார்.

122 குடி­யி­ருப்­பு­களை உள்­ள­டக்­கிய மஸ்கொட் கோபுரக் கட்­ட­டத்தில்  கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை பிள­வுகள் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்தக் கட்­ட­டத்தில் குடி­யி­ருந்த மக்கள் அனை­வரும்  வெளியே­ற்றப்­பட்டனர்.

நிர்­மா­ணிக்­கப்­பட்டு ஒரு தசாப்த கால­மே­யான மேற்­படி கட்­ட­டத்தின் அடி­த்த­ளத்தில் ஏற்­பட்ட  பிளவு அக­ல­மா­ன­தை­ய­டுத்து அந்தக் கட்­ட­டத்­தி­லி­ருந்­த­வர்கள் உட­ன­டி­யாக வெளியேற்­றப்­பட்­டனர்.

இந்த கட்­ட­டத்தில் ஏற்­பட்ட வெடிப்­புக்கு அருகில் புதிதாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­டமே காரணம் எனக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இதற்கு முன்னர் கடந்த வருட நத்தார் பண்­டிகைக்கு முதல் நாள் சிட்னி ஒலிம்பிக் பூங்­கா­வி­லுள்ள ஓபல் கோபுரக் கட்­ட­டத்தில்  பிள­வுகள் ஏற்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் பாரிய சத்­தங்கள் கேட்­ட­தை­ய­டுத்து அங்கு வசித்த அனை­வரும் வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கட்­டட நிர்­மாணம் தொடர்­பான நிபு­ணரும் ஆலோ­ச­க­ரு­மான எட்வின் அல்­மெ­டியா தெரி­விக்­கையில்,  மேற்­படி கட்­டடங்­களில் ஏற்­பட்ட பிள­வு­க­ளா­னது  பாரிய  பரந்­த­ள­வான பிரச்­சி­னை­யொன்றின் பிர­தி­ப­லிப்­பாக உள்­ள­தாக கூறினார்.

நிர்­மாண  செயற்­கி­ர­மங்­க­ளிலுள்ள ஒழுங்­கீ­னங்கள், வானு­யர்ந்த மாடிக் கட்­டடங்­களை நிர்­மா­ணிக்கப்  பொருத்­த­மற்ற நிலங்­களில் அத்­த­கைய கட்­ட­டங்­களை நிர்­மா­ணித்தல் மற்றும் நிர்­மா­ணத்தில் ஈடு­ப­டு­பவர்­களின் பொறுப்­பற்ற செயற்­பா­டுகள் என்­பன  இவ்­வாறு கட்­ட­டங்­களில் பிளவு ஏற்­பட்டு அவை இடிந்து விழத்தயா­ரா­வ­தற்கு கார­ண­மா­வ­தாக அவர் தெரி­வித்தார்.

பல உய­ர­மான குடி­யி­ருப்பு மாடிக் கட்­ட­டங்­களில் அத்­தி­வா­ரத்­திலான பிரச்­சி­னை­கள, பூஞ்­சண பாதிப்பு மற்றும் நீர் ஊடுருவல் காணப்படுவதும் அந்தக் கட்டடங்களில் பிளவு ஏற்படக் காரணமாக அமைவதாக அவர் கூறினார்.

குறைந்த தரமுள்ள கொங்கிறீட்டைப் பயன்படுத்தி அத்திவாரமிடப்பட்ட  உயர்ந்த மாடிக் கட்டடங்கள்  பெரும் அபாயமிக்கவை என அவர்  எச்சரிக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47