மூனாமடு குளத்தில் இறந்த மீன்களை அகற்ற நடவடிக்கை

Published By: Digital Desk 4

18 Jun, 2019 | 11:20 AM
image

வவுனியா மூனாமடுக் குளத்தின் நீர் வற்றியமையால் இறந்த மீன்களினை அகற்றுவதற்தற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பணிமனையில் மாவட்ட  பொது சுகாதார பரிசோதர் எஸ்.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மூனாமடு குளத்தின் கீழ் விதைக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் சிறுபோக விவசாய நிலங்களுக்கு அதிகளவிலான நீரை பயன்படுத்தியமையால் குளத்து நீர் வற்றியுள்ளது. 

இதன்காரணமாக நீர் இன்றி அக்குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து வவுனியா சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட சுகாதார பரிசோதர்கள் குறித்த நீர்பாசன குளத்தின் பங்காளர்களின் துணையுடன் இறந்த மீன்களை அகற்றி புதைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த குளத்தின் நீர்மட்டத்தை கவனத்தில் கொள்ளாது சிறுபோக நெற் செய்கைக்கு நீர் இறைக்கப்பட்டமையே மீன் இறப்புக்கு காரணம் எனவும், சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயற்பாடே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10