ஜனா­தி­பதி, பிர­தமர் உறு­தி­ கூ­றியும் இது­வரை தர­மு­யர்த்­தப்­ப­டா­தது ஏன்? - தொடர்கிறது உண்ணாவிரதம் !

Published By: Digital Desk 4

18 Jun, 2019 | 11:02 AM
image

கடந்த 30 வரு­ட ­கா­ல­மாக இயங்­கி­வ­ரு­கின்ற கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் விவ­காரம் தொடர்பில் நாம்  பல ­த­ட­வைகள் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோ­ரைச் ­சந்­தித்து கோரிக்­கை­வி­டுத்தோம். செய்­து­ த­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தனர். ஆனால் இந்­தக்­க­ணம்­ வ­ரை ­எ­து­வுமே நடை­பெ­ற­வில்லை. எனவே தர­மு­யர்த்­தப்­ப­டும்­ வ­ரை­ சாகும் வரை உண்­ணா­வி­ர­த­மி­ருப்போம்.

இவ்­வாறு கல்­மு­னையில் இடம்­பெற்­று­வரும் உண்­ணா­வி­ர­தத்தில் கலந்­து­கொண்­டுள்ள உண்­ணா­வி­ர­தி­யான தமிழ்த்­ தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­க­ர­ சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன் தெரி­வித்தார்.

கல்­முனை வடக்­கு­ பி­ர­தேச செய­லகம் தர­மு­யர்த்­தப்­ப­டும் ­வரை நேற்று திங்­கட்­கி­ழமை காலை கல்­மு­னையில்  சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதம் ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது.

கல்­முனை வடக்கு பிர­தே­ச­ செ­ய­லக முன்­றிலில் இந்த உண்­ணா­வி­ர­தப் ­போ­ராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி வண.ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர், கல்­முனை முருகன் ஆலயப் பிர­த­ம­ குரு சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்­தக்­ கு­ருக்கள், தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­கர ­சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அ.விஜ­ய­ரெத்­தினம் ஆகியோர் முதற்­கட்­ட­மாக உண்­ணா­வி­ர­தத்தில் குதித்­துள்­ளனர். மேலும் பலர் இதில் இணைந்­து­வ­ரு­கின்­றனர். உறுப்­பினர் ராஜன் மேலும் கூறு­கையில்,

எமது நீண்­ட ­காலக் கோரிக்­கையை தொடர்ந்­து­வந்த அர­சாங்­கங்கள் இழுத்­த­டித்து­ வந்­துள்­ளன. இனியும் நாம் பொறுமை காக்­கத் ­த­யா­ரில்லை. எனவே நாம் களத்தில் இறங்­கு­கின்றோம். 

நாம் ஜனா­தி­பதி, பிர­தமர், முன்னாள் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் சம்­பந்தன் ஐயா, எமது த.தே.கூட்­ட­மைப்பு எம்.­பி.க்

கள், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த அனை­வ­ரையும் சந்­தித்­துப்­ பே­சினோம். யாரும் மறுக்­க­வில்லை. செய்­து ­த­ரு­வ­தா­கவே வாக்­கு­று­தி­ய­ளித்­தார்கள்.

எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோடீஸ்­வரன் பலத்­த­ மு­யற்சி மேற்­கொண்­டி­ருந்தார். அது­கூட கைகூ­ட­வில்லை. அவர் நாளை எம்­முடன் இணை­ய­வி­ருக்­கிறார்.

ஆனால் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய எங்­களை தொடர்ந்து அவ்­வ­ர­சாங்கம் ஏமாற்­றி­ வ­ரு­கி­றது.

கல்­மு­னை­யி­லுள்ள ஓர் அர­சி­யல் ­வா­திக்­காக இரு இனங்­க­ளையும் பிரித்­துப்­பார்க்­கி­றார்கள். எமது இந்­தப் ­போ­ராட்டம் முஸ்­லிம்­ மக்­க­ளுக்கு எதி­ரா­ன­தல்ல. எந்த இனத்­துக்கோ சாதிக்கோ எதி­ரா­ன­தல்ல.

எனது முயற்­சி­யால் முஸ்­லிம்­களின் தலைவர் அமைச்சர் ஹக்கீமை கொழும்­பில்­சந்­தித்துப் பின்னர் கல்­மு­னையில் கலந்­து­ரை­யா­டி­ய­போது தர­மு­யர்த்­தலில் தமக்கு எவ்­வித எதிர்ப்­பு­மில்லை என்று கூறி­யி­ருந்தார்.

நாம் எமது மக்­களின் தேவை­களை தடை­யின்றிப் பெற்­றுக்­கொள்ள இயங்­கி­வரும் அலு­வ­ல­கத்தை தர­மு­யர்த்­து­மாறே கேட்­கிறோம். இதனால் முஸ்லிம் மக்­க­ளுக்கு எவ்­வித பாதிப்­பு­மில்லை.

எமது தமிழ் மக்­களின் ஒத்­து­ழைப்பு இதற்கு பூர­ண­மா­கக்­ கி­டைக்­கு­மென பெரிதும் நம்­பு­கிறோம். எம்­முடன் இணைந்து போராட்­டத்­தி­ல் ஈ­டு­ப­ட ­வி­ரும்­புவோர் தாரா­ள­மாக கலந்து­ கொள்­ள­ மு­டியும்.

இது தினம் தினம் தமிழ்ப் ­பி­ர­தே­ச­மெங்கும் தொடர்ந்து வியா­பிக்கும். முதலில்  அம்­பாறை மாவட்டம், மட்டு.மாவட்டம் எனத் தொடர்ந்து முழு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் இதனை விஸ்­த­ரிக்கத் திட்­ட­மிட்­டுள்ளோம் என்றார்.

சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்தக் குருக்கள் கருத்­து­ரைக்­கையில்,

கடந்த 30 வருட கால­மாக இயங்­கி ­வரும் எமது பிர­தே­ச­ செ­ய­ல­கத்தை தர­மு­யர்த்தி எமது மக்கள் சௌக­ரி­யத்­துடன் சேவை­யைப் பெற இந்த அர­சாங்கம் உட­ன­டி­யாக தர­மு­யர்த்­த­ வேண்டும். ஒரு ­சில அடிப்­ப­டை­வாத அர­சி­யல்­வா­தி­களின் சுய­நல அர­சி­ய­லுக்காக இரு இனங்­க­ளையும் மோத­வி­ட­மு­டி­யாது.

இந்த வடக்குப் பிர­தே­ச­ செ­ய­லக விவ­கா­ரத்தால் இன்று கல்­மு­னையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரிய விரிசல் காணப்படுகிறது. 

அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாகவிருந்தால் இப்பிரச்சினையை இன்றோடு தீர்த்துவிட அரசைக் கோருகின் றேன் என்றார்.

வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கூறுகையில்: இந்தக் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் யாருக்குப் பிரச்சினை? அதற்கான காரணங்கள் என்ன? சகல மக்களதும் தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்யவே இத்திட்டம். அதில் ஓர் இனம் பாதிக்கப்பட முடியாது. எனவே அரசாங்கம் உடனடியாகத் தரமுயர்த்தி மக்களின் அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13