வத்­தளை தமிழ் பாட­சாலை : ஜூலை 12 ஆம் திகதி அங்­கு­ரார்ப்­பணம்

Published By: J.G.Stephan

18 Jun, 2019 | 10:51 AM
image

கம்­பஹா மாவட்ட வத்­தளை தமிழ் பாட­சாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை வத்­தளை ஹுணுபிட்­டி­யவில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­படும். 

நன்­கொ­டை­யா­ளர்கள் மாணிக்­க­வா­சகம் குடும்­பத்­தி­னரால் வழங்­கப்­பட்­டுள்ள காணியில் தற்­ச­மயம் இருக்கும் கட்­டி­டத்தில் வகுப்­புகள் ஆரம்­பிக்­கப்­படும். 

ரூபா. 78 மில்­லியன் மதிப்­பீட்டில் கட்­டப்­ப­ட­வுள்ள புதிய நான்கு மாடிப் பாட­சாலை கட்­டி­டத்­துக்­காக, முதற்­கட்­ட­மாக எனது அமைச்­சி­லி­ருந்து ரூபா 27 மில்­லியன் நிதி ஒதுக்­கீட்டை இன்று கையெ­ழுத்­திட்­டுள்ளேன். 



இதற்­கான அடிக்­கல்லும் அன்­றைய தினம் நாட்­டப்­பட்டு கட்­டிட பணிகள் ஆரம்­பித்து வைக்­கப்­படும் என ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணி,-­ தமிழ் முற்­போக்கு கூட்­டணித் தலை­வரும், கொழும்பு மாவட்ட எம்­.பி.யும், தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழி கள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்­ச­ரு­மான  மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.
  
இது தொடர்­பான அமைச்­ச­ரவை பத்­தி­ரங்­களை கடந்த வரு­டமும், இவ்­வ­ரு­டமும் இரண்டு முறை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அருண் மாணிக்­க­வா­சகம் இந்துக் கல்­லூரி என்ற பெயரில் முதலாம் வகுப்­பி­லி­ருந்து உயர் வகுப்­புகள் வரை கொண்ட தேசிய பாட­சா­லை­யாக இது நடத்­தப்­படும் அனு­ம­தியை பெற்­றுக்­கொண்­டுள்ளேன் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறி­யுள்­ள­தா­வது, கம்­பஹா மாவட்ட தமிழ் மக்­களின் நீண்­ட­கால எதிர்­பார்ப்­பாக இருந்த இந்த தமிழ் பாட­சாலை தேவையை நிறை­வேற்றி வைக்கும் முக­மாக நன்­கொ­டை­யா­ளர்கள் மாணிக்­க­வா­சகம் குடும்­பத்­தினர் இந்த காணி­யையும், அங்கே அமைந்­துள்ள கட்­டி­டத்­தையும் அர­சுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளனர். அங்கே தமது மறைந்த மைந்­தனின் பெயரில் தமிழ் இந்து பாட­சா­லை­யாக அமைய வேண்டும் என்­ப­துவே மாணிக்­க­வா­சகம் அவர்­க­ளது கனவு, கோரிக்­கை­யாகும். 

அந்த அடிப்­ப­டை­யி­லேயே எனது அமைச்­ச­ரவை பத்­தி­ரங்கள் அமைந்­தன. புதிய நான்கு மாடிக் கட்­டி­டத்­துக்­கான ரூபா 78 மில்­லியன் மதிப்­பீட்டில் முதற்­கட்­ட­மாக எனது தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்­சி­லி­ருந்து ரூபா 27 மில்­லியன் நிதி ஒதுக்­கீடும் செய்­யப்­ப­டு­கி­றது. இவற்றின் மூலம் வத்­தளை வாழ் தமிழ் மக்­களின் மிக நீண்­ட­கால எதிர்­பார்ப்பு, கனவும் நன­வா­கின்­றது.  

தமிழ் பாட­சாலை பயன்­பாட்­டிற்­கா­கவே இந்தக் காணி அர­சுக்கு நன்­கொ­டை­யாக மாணிக்­க­வா­சகம் குடும்­பத்­தி­னரால் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே இந்த தேவையைத் தவிர்த்து வேறு தேவைக்கு இந்த இடம் பயன்­ப­டுத்­தப்­பட முடி­யாது. அப்­படி பயன்­ப­டுத்­தப்­பட்டால் இந்தக் காணி மீண்டும் நன்­கொ­டை­யா­ளர்­க­ளிடம் மீளக்கைய­ளிக்­கப்­பட வேண்டும் என்ற விதியின் அடிப்­ப­டை­யி­லேயே இது தொடர்­பான என் அமைச்­ச­ரவை பத்­திரம் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்­ளது. 

 இங்கே அமையும் அருண் மாணிக்­க­வா­சகம் இந்துக் கல்­லூரி, முதலாம் வகுப்­பி­லி­ருந்து செயற்­படும் ஒரு தேசிய பாட­சா­லை­யாகும். இது தேவை கரு­தியே மாகாண சபை பாட­சா­லை­யாக அமைக்­கப்­ப­ட­வில்லை. வத்­தளை ஒலி­ய­முல்லை பிர­தே­சத்தில் மிக நீண்ட காலத்­துக்கு முன் ஒதுக்­கப்­பட்டு பலரால் அடிக்கல் நாட்­டப்­பட்டும் கட்­டப்­ப­டாத பாட­சாலை காணி, ஒரு மாகா­ண­சபை பாட­சாலை அமைக்கப்பட வேண்டிய காணியாகும். இந்த  அருண் மாணிக்கவாசகம் இந்துக் கல்லூரி பாடசாலை அந்த மாகாண சபை பாடசாலைக்கு மாற்று கிடையாது.

ஆகவே ஒலியமுல்லை பிரதேசத்தில் மாகாண சபை பாடசாலை தமிழ் பாடசாலை கட்டப்பட வேண்டும். அதை எவரும் கைவிட முடியாது. இதை வத்தளை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்வார்கள் என விரும்புகிறேன்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15