கஞ்சா குறித்து ஆய்வில் வெளியான தகவல்கள் !

Published By: R. Kalaichelvan

17 Jun, 2019 | 05:43 PM
image

மனிதனின் பழக்கவழக்கங்களில் போதைபொருட்களுக்கு மிகமுக்கிய இடமுண்டு. 

போதை எற்படுத்தும் பல விதமான பொருட்களில் கஞ்சாசெடியும் ஒன்று. இது மூலிகையாக பயன்படும் தாவரமாக இருந்த போதும் இது மிகப்பழமையான காலம் தொட்டு போதைப்பொருளாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மேற்கு சீனாவிலுள்ள பாமிர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஜிர்சங்கால் கல்லறையில் மேற்கொள்ளப்பட்டு ஆய்வில் கிடைத்துள்ள மாதிரிகளை ஆய்விற்குட்படுத்தியதில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர்   கஞ்சா புகைக்கப்பட்டிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழங்கால கல்லறைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தீச்சட்டி ஒன்றில் கஞ்சா பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இது கஞ்சா மதரீதியிலான சடங்குகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதுடன் இம் மாதிரிகளை ஆரம்பகால ஆதாரங்களாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பழங்காலத்தை சேர்ந்தவர்கள், தீச்சட்டியில் சூடான கற்களையும், கஞ்சா செடியின் இலைகளையும் போட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கஞ்சாவில் மூளையை பாதிக்கக் கூடிய டெட்ரா-ஹைட்ரோ-கன்னாபினால் எனும் சேர்மங்கள் அதிகம் உள்ளன. இதை அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களும் நன்கு அறிந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மூளையை பாதிக்கக்கூடிய பண்புகளுக்காக கஞ்சா பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இறுதிச் சடங்குகளின் போது இவை எரிக்கப்பட்டு புகை கிளப்பப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தீச்சட்டியில் கண்ணுக்கு தெரியாத நிலையில் இருந்த சேர்மங்களை கண்டறிவதற்காக குரோமடோகிராபி-மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி என்ற செயல்முறையை பயன்படுத்தியபோது தனிமைப்படுத்தப்பட்ட சேர்மங்களின் வேதியியல் அமைப்பு கஞ்சாவின்  ரசாயன அமைப்புடன் சரியாக பொருந்தி இருந்ததை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர்.

இந்த கண்டுபிடிப்பு, இதற்கு முன்னர் வடக்கு சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்திலும், ரஷ்யாவின் அல்தாய் மலைகளிலும் கிடைக்கப்பெற்ற கஞ்சா இருப்பதற்கான பிற ஆரம்பகால மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் பிளாங்க் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் நிக்கோலே போய்வின் கூறுகையில் 

"கஞ்சா செடிகள் முதலில் மத்திய கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்பட்டு, பின்பு உலகின் மற்ற பகுதிகளில் பரவி இருக்கலாம் என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில் இந்த ஆய்வு முடிவுகள் வந்துள்ளன," என தெரிவித்துள்ளார். 

ஆராய்ச்சி குறித்த முடிவுகளை 'சயின்ஸ் அட்வான்சஸ்' எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22