சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டதா ?- மஹிந்த யாப்பா

Published By: R. Kalaichelvan

17 Jun, 2019 | 04:24 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ்   ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக  முன்னாள்  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா  பாராளுமன்ற தெரிவு குழுவில் குறிப்பிட்ட போது  தெரிவு குழுவின் உறுப்பினர்கள் எவரும் கேள்வியெழுப்பவில்லை.

 ஆகவே  இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம்  காங்கிரஸின்   தலைவர் ரவூப் ஹக்கீம் தெளிவுப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தெரிவு  குழுவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது  என்பது தெளிவாக தெரிந்தக் கொள்ள முடிகின்றது.

தெரிவு குழுவில் சாட்சியமளிப்பவர்களிடம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  மையப்படுத்தியே  கேள்விகள்  கேட்கப்படுகின்றன. 

அரசாங்கத்திற்கு எதிராக  குறிப்பிடப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவை  விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

கடந்த  பாராளுமன்ற தெரிவு குழுவில் சாட்சியமளித்த முன்னாள கிழக்கு மாகாண  ஆளுநர்   ஹிஸ்புல்லாஹ் பல  விடயங்களை குறிப்பிட்டார்.  

மிலேச்சத்தனமான   குண்டு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் முக்கிய சூத்திரதாரியான பயங்கரவாதி  சாஹ்ரானுடன்  முஸ்லிம் காங்கிரஸ்  ஒப்பந்தம் செய்துக் கொண்டது என்று குறிப்பிட்டார்.

ஆகவே  பயங்கரவாதி சஹ்ரானுடன்  முஸ்லிம் காங்கிரஸ் என்ன  ஒப்பந்தம் செய்துக் கொண்டது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  ரவூப் ஹக்கீம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51