இலங்கை அணிக்கு தடை வருமா?

Published By: Vishnu

17 Jun, 2019 | 11:11 AM
image

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்­டியின் பின்னர் ஊட­கங்­களைச் சந்­திக்­காமல் இலங்கை அணி புறக்­க­ணித்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

இது­கு­றித்து விசா­ரணை நடத்­தி­வரும் ஐ.சி.சி. இலங்கை அணிக்கு பெரும் தண்­டனை வழங்­கவும் வாய்ப்­புள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி 87 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. இந்தப் போட்­டிக்குப் பிறகு ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­திக்­காமல் இலங்கை அணி புறக்­க­ணித்­துள்­ளது.

ஐ.சி.சி.யின் விதி­மு­றைப்­படி போட்டி முடிந்த பின் வெற்றி பெற்ற அணியும் தேல்­வி­ய­டைந்த அணியும் ஊடக­ங்களைச் சந்­தித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கட்­டுப்­பாடு இருக்­கி­றது. இந்த விதி­மு­றையை மீறிய இலங்கை அணி ஆஸி.க்கு எதி­ரான போட்டி முடிந்த பின் அனைத்து வீரர்­களும் ஊட­க­வி­யலா­ளர்­களைச் சந்­திக்­காமல் சென்­று­விட்­டனர். 

இது ஐ.சி.சி. விதி­மு­றை­யின்­படி ஒழுக்­கக்­கே­டானது, விதி­முறை மீறல் என்­பதால் இலங்கை அணிக்கு தடை­வி­திப்­பது குறித்து ஐ.சி.சி. ஆலோ­சிப்­ப­தாக சர்­வ­தேச ஊடங்கள் செய்தி வெளியிட்­டுள்­ளன.

இது குறித்து ஐ.சி.சி. செய்தித் தொடர்­பாளர் நிரு­பர்­க­ளிடம் கூறு­கையில், ஐ.சி.சி. விதி­மு­றை­யின்­படி போட்டி முடிந்­தபின் தோற்ற அணியும் வெற்­றி­பெற்ற அணி­யும் ஊடகங்­களைச் சந்­தித்துப் பேட்டி கொடுப்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. 

இதை மீறியது இலங்கை அணியின் தவாறுகும். இந்த தவ­றுக்கு நிச்­சயம் இலங்கை அணிக்கு தண்­டனை உண்டு. அதி­க­பட்­ச­மாக தடை விதிக்­கக்கூ­டிய அனைத்து முகாந்­தி­ரங்­களும் இருக்­கின்­றன. விரைவில் முடிவு அறி­விக்­கப்­படும் எனத் தெரி­வித்­துள்ளார்.

இதற்­கி­டையே இலங்கை அணியின் முகா­மை­யா­ளரும், தெரி­வுக்­குழுத் தலை­வ­ரு­மான அசந்த டிமெல் ஐ.சி.சி. குறித்து கடு­மை­யாக விமர்­சனம் செய்­துள்ளார். உலகக் கிண்ணத் தொடரில் பங்­ேகற்க வந்­தி­ருக்கும் 10 அணி­க­ளையும் சம­மாக நடத்த வேண்­டி­யது ஐ.சி.சி.யின் பொறுப்­பாகும். ஆனால் ஒவ்­வொரு அணி­யையும் அவர்­களின் தரத்­துக்கு ஏற்ப நடத்­து­வது மாற்­றாந்தாய் மனப்­பான்­மையை காட்­டு­கி­றது.

இலங்­கைக்கு போது­மான பயிற்சி வச­திகள் இல்லை. போக்­கு­வ­ரத்து வசதி கிடை­யாது. உல­கத்­த­ரத்தில் விளை­யாடும் அணி­க­ளுக்கு தங்கும் வசதிகூட மோசமான நிலையில் இருக்கிறது. இலங்கை போன்ற சிறிய அணிகளுக்கு சாதாரண பேருந்து மற்ற அணிகளுக்கு சொகுசு பேருந்து ஹேட்டலில் தங்கும்வசதியும் முறையாக இல்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09