புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி

Published By: Vishnu

17 Jun, 2019 | 10:58 AM
image

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தைத் தொடர்ந்து இலங்­கைக்கு வருகை தந்த முத­லா­வது வெளி­நாட்டு அரச தலைவர் என்ற ரீதியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் விஜயம் இலங்­கைக்கு மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமைந்­தி­ருந்­தது. ஆனால், இந்த முக்­கி­யத்­துவம் வாய்ந்த விஜ­யத்­தின்­போது  தமிழ்ப் பேசும் மக்கள் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்திய விடயம் ஒன்றும் பதி­வா­கி­யுள்­ளது. 

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்தை முக்­கி­யத்­து­வப்­ப­டுத் தும் முக­மாக சம்­பி­ர­தாயபூர்­வ­மாக மரக்­கன்று ஒன்று இந்­தியப் பிர­த­மரால் ஜனா­தி­பதி மாளி­கையில் நாட்டி வைக்­கப்­பட்­டது. 

அந்த மரக்­கன்றின் பெயர் மற்றும் அது தொடர்­பான விப­ரங்கள் அடங்­கிய பெய ர்ப் பலகை ஒன்றும் நாட்டி வைக்­கப்­பட்ட மரக்­கன்­றுக்கு அருகில் வைக்­கப்­பட்­டது. ஆனால் அந்த பெயர்ப் பல­கையில்  ஆங்­கி லம் மற்றும் சிங்­களம் ஆகிய இரு மொழி­ களில் மாத்­தி­ரமே குறிப்பு எழு­தப்­பட்­டுள் ளது. தமிழ்மொழி இங்கு புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது.  

நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தின் அவ­சி யம் தொடர்­பான முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்ற நிலை­மையில், இவ்­வாறு மிக முக்­கிய விட­யத்தில் தமிழ் மொழி புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருப்­பது தமிழ் மக்கள் மத்­தியில் மேலும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதுவும் குறிப்­பாக, இந்தியப் பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது இந்த விடயம்  இடம்­பெற்­றுள்­ளமை  கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 

இலங்­கையில் தமிழ், சிங்­களம் ஆகிய மொழிகள் அரச கரும மொழி­க­ளாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பில் இந்த இரண்டு மொழி­களும் அரச கரும மொழிக­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.  அதேவேளை ஆங்­கிலம் இணைப்பு மொழி­யாக   உள்­ளது. ஆனால் இணைப்பு மொழி­யொன்­றுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற முக்­கி­யத்­துவம் அரச கரும மொழி­யாக ஏற்றுக் கொள்­ளப்­பட்ட தமிழ்மொழிக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இதற்கு பொறுப்­பேற்க வேண்­டி­ய­வர்கள் யார்? 

அர­சி­ய­ல­மைப்­பிற்குள் உள்­ள­டக்­கப்­பட்டு, அரச கரும மொழி­யாக ஏற்றுக் கொள்ளப்­பட்டு, அதற்­கென ஒரு அமைச் சும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு   மொழி அமு­லாக்­கத்­துக்­காக அரச கரும மொழிகள் திணைக்­க­ளமும் அமைக்­கப்­பட்­டுள்­ள­மையும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. 

இவ்­வி­ரண்டும் இருந்தும் தமிழ்மொழி தெரிந்தே புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளதா? என்ற கேள்வி எழு­கின்­றது. கடந்த காலங்­களில் அரச கரும மொழிகள் அமைச்சு பெரும்­பான்மை அமைச்­சர்­களின் பொறுப்­பி­லி­ருந்­தது. அவர்­க­ளுக்கு தமது மொழியை அமு­லாக்க வேண்­டிய தேவை இருக்­க­வில்லை. காரணம் இலங்­கையில் சிங்­கள மொழி என்றும் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

 ஆனால், தற்­போது தமிழ்ப் பேசும்  அமைச்சர் ஒரு­வரின் கீழ் அரச கரும மொழிகள் தொடர்­பான பொறுப்பு உள்­ள­டங்­கு­வ­தோடு, அரச கரும மொழிகள் திணைக்­க­ளத்தின் தலை­வ­ராக தமிழ்ப் பேரா­சி­ரியர் ஒரு­வரும்  பணி­யாற்­று­கிறார்.  இந்த நிலை­யி­லேயே  இந்த புறக்­க­ணிப்பு இடம்­பெற்­றுள்­ளது. 

இந்த விடயம் தொடர்­பாக தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் மனோ கணே­சனிடம் வின­விய போது, அவர் இவ்­வாறு விளக்­க­ம­ளித்தார். 

 இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விஜ­யத்தில் இடம்­பெற்ற ஒரு நிகழ்வு தொடர்­பான பெயர்ப் பல­கையில் இவ்­வாறு தமிழ்மொழி புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருப்­பது தவ­றா­ன­தொரு விட­ய­மாகும். இது குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

எனவே இந்த விடயம் குறித்து கவ­னம் செலுத்­து­மாறும், உட­ன­டி­யாக அந்த பெயர்ப் பல­கையில் தமிழ்மொழி­யிலும் குறிப்பு எழுத்­தப்­பட வேண்டும் என்றும் குறிப்­பிட்டு ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு அரச கரும மொழிகள் அமைச்­சினால் கடி­த­மொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், அதற்கு பதில் கடிதம் எதுவும் இதுவரையில் கிடைக்கப் பெற­வில்லை. 

எதிர்­வரும் நாட்­களில் இது தொடர்­பாக ஏனைய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். மேற்­கு­றிப்­பிட்ட அந்த பெயர்ப் பல­கையில் மாத்­தி­ர­மல்ல, ஜனா­தி­பதி மாளி­கையோ செய­ல­கமோ அல்­லது ஏனைய திணைக்­க­ளங்­களோ எது­வாக இருந்­தாலும் அங்கு வைக்­கப்­பட்­டி­ருக்கும் பெயர்ப் பல­கை­களில் தமிழ்மொழி கட்­டாயம் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம் என்று  அமைச்சர் தெரி­வித்தார். 

அரச கரும மொழிகள் திணைக்­க­ளத்தின் தலைவர் பேரா­சிரியர் சந்­தி­ர­சே­க­ரத்திடம் வின­விய போது, 

அரச கரும மொழிகள் திணைக்­க­ளத்தின் தலைவர் என்ற ரீதியில் இதற்கு எமது கடும் எதிர்ப்­பினை வெளி­யி­டு­கின்றோம். இந்த சந்­தர்ப்­பத்தில் மாத்­தி­ர­மல்ல, இதே போன்று பல சந்­தர்ப்­பங்­களிலும் அரச கரும மொழிக் கொள்கை மீறப்­பட்­டுள்­ளது. 

இவை தெரி­யாமல் இழைக்­கப்­பட்ட தவறு என்று யாரும் காரணம் கூற முடி­யாது. நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள சகல திணைக்­க­ளங்கள், நிறு­வ­னங்­க­ளுக்கும் இவ்­வி­டயம் தொடர்­பான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனாலும் இதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கார வர்க்­கத்­தினர் தான் அக்­க­றை­யற்று செயற்­ப­டு­கின்­றனர்.பெரும்­பா­லா­ன­வர்கள் பெரும்­பான்மை இனத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக இருக்­கின்­ற­மையே இதற்­கான கார­ண­மாகும் என்று நான் கரு­து­கின்றேன்.

இன்று நாட்டில் ஏற்­ப­டு­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு 'மொழி' பிர­தான கார­ண­மாக இருக்­கின்­றது. வெவ்­வேறு மொழி பேசு­ப­வர்­களில் சிலர் ஏனைய மொழி­களை மதிப்­பதோ, அதில் அக்­கறை செலுத்­து­வதோ இல்லை. சிலர் தெரிந்தே தமிழ்மொழியை புறக்­க­ணிப்­பார்கள். 

இவ்­வாறு மொழி தொடர்­பான நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­களின் அக்­க­றை­யின்­மையே தமிழ்மொழி புறக்­க­ணிப்­பிற்கு பிர­தான கார­ண­மாகும். நாட­ளா­விய ரீதியில் இது போன்று பல இலட்­சக்­க­ணக்­கான பெயர்ப் பல­கைகள் உள்­ளன. அவற்றில் தமிழ்மொழி பிழை­யாக எழுத்­தப்­பட்­டுள்­ளமை உள்­ளிட்ட பல்­வேறு குறை­பா­டுகள் தொடர்பில் அரச கரும மொழிகள் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. அதற்­கான நட­வ­டிக்­கை­களும் எம்மால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இலங்­கையில் பெரும்­பான்மை மொழி­யான சிங்­கள மொழி கூட சில இடங்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அண்­மையில் சீன அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­ட­மொன்று தொடர்­பாக எழு­தப்­பட்­டி­ருந்த பெயர்ப் பலகை தொடர்­பிலும் இதே போன்­ற­தொரு பிரச்­சினை ஏற்­பட்­டது. அதன் போது நாம் நேர­டி­யாகச் சென்று சீன தூது­வரை சந்­தித்து இந்த விடயம் தொடர்பில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம். இனி இது போன்ற தவ­றுகள் இடம்­பெ­றாமல் பார்த்துக் கொள்­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார். எனவே இவ்­வாறு ஏற்­படும் மொழி பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொது மக் களும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். முழுமையாக தமிழ்மொழியை அமு லாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடு படுவோம் என்றார். 

எப்படியிருப்பினும், இந்தியப் பிரதமரின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் இந்த புறக் கணிப்பு இடம்பெற்றுள்ளது. இது  தமிழ்ப் பேசும்  மக்கள் மத்தியில்  கவலையை ஏற்படுத்தியுள்ளது.   நல்லிணக்கமும் தேசிய ஒற்றுமையும் பலப்படுத்தப்படவேண்டிய தற்போதைய தீர்க்கமான காலகட்டத்தில் இதுபோன்ற புறக்கணிப்புகள் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன என்பதே யதார்த்தமாகும். எனவே சம்பந்தப்பட்ட வர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தவேண்டும்.

- எம்.மனோசித்ரா -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41