40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு

Published By: J.G.Stephan

16 Jun, 2019 | 01:32 PM
image

ரஷ்­யாவின் திர்­குட்யாக் என்ற ஆற்­றி­லி­ருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட ஓநாயின் தலை­யொன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது .

ரஷ்ய நாட்டின் சேர்­பி­யா­வுக்­குட்­பட்ட  யாகுடா பகு­தி­யி­னூ­டாக திர்­குட்யாக் என்ற ஆறு பாய்­கி­றது. இந்­நி­லையில்  இவ் ஆற்­றி­லி­ருந்து  யாகுடா பகு­தி­யினை சேர்ந்த பவேல் என்ற நபர் ஓநாயின் தலை­யொன்­றினை கண்­டெ­டுத்­துள்ளார். ஓநாயின் தலை மிகவும் வித்­தி­யா­ச­மான உருவ அமைப்­பினை கொண்­டி­ருந்­ததால் அதனை அப்­ப­குதி மக்கள் யாகு­டாவில் உள்ள அறி­வியல் ஆராய்ச்சி மையத்­திற்கு அனுப்­பி­வைத்­துள்­ளனர்.

அந்த ஓநாயின் தலை­யினை ஆய்வு செய்த யாகு­டாவில் உள்ள ஆராய்ச்­சி­யா­ளர்கள் அதன் வாழ்நாள் காலம் குறித்த அடுத்­த­கட்ட ஆய்­வுக்­காக ஜப்பான் மற்றும் சுவீடன் நாட்டிலுள்ள சக ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளுக்கு அந்த ஓநாய்­ த­லையின் மாதி­ரி­களை அனுப்பி வைத்­துள்­ளனர்.

ஜப்பான் மற்றும் சுவீடன் நாட்டின் ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்டெடுக்கப்பட்ட ஓநாயின் தலையின் மாதி­ரி­களை ஆராய்ந்­ததில் அது சுமார் 40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட  ஓநாயின் தலை என கண்­டு­பி­டித்­துள்­ளனர் . மேலும் பனியில் இருந்­ததால் அதன் தலைப் பகுதி அழு­காமல் உறைந்­துள்­ள­தாக ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­தனர். இது குறித்து மேலும் பல்­வேறு ஆராய்ச்­சி­களை ஆய்­வா­ளர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். 40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட உறைந்த நிலையிலிருந்த ஓநாயின் தலை ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டமை பல ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right