நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

Published By: Vishnu

15 Jun, 2019 | 02:50 PM
image

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது. 

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. 

அவுஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியதுடன் நான்காவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சும் வலுவாக  நிலையில் உள்ளது. டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் சுமித் சிறந்த முறையில்  தமது பங்களிப்பினை ஆற்றிவருகின்றார்கள். 

பந்து வீச்சிலும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நெதன் கொல்டர்  ஆகியோர் எதிரணிக்கு சவால் விடக்கூடியவர்கள்.

இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் படு‍ தோல்வியடைந்தது. அடுத்த ஆட்டத்தில் 34 ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. மூன்றாவது மற்றும் நான்காவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை அணி துடுப்பட்டத்தில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் தடுமாறி தான் வருகிறது. இலங்கை அணி எல்லா துறைகளிலும் எழுச்சி பெற்றால் தான் அவுஸ்திரேலிய அணிக்கு சவால் விடக்கூடியதாக இருக்கும்.

இதுவரை இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் அவுஸ்திரேலிய அணி 7 முறையும் இலங்கை அணி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21