சிறகு’ படத்தின் ஓடியோ வெளியீடு

Published By: Daya

15 Jun, 2019 | 02:24 PM
image

எழுத்தாளரும், இலக்கியவாதியுமான குட்டி ரேவதி இயக்கிய ‘சிறகு’ படத்தின் ஒடியோ வெளியீடு இன்று சென்னையில் இடம்பெற்றது. 

எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பன்முகத்திறமை கொண்ட குட்டி ரேவதி, முதன்முதலாக இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிறகு’ இப்படத்தில் ‘மெட்ராஸ்’ பட புகழ் ஹரி கிருஷ்ணன், அறிமுக நாயகி அக்ஷிதா, டாக்டர் வித்யா, நடிகர் நிவாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆரொல் கரோலீ இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்குபற்றிய இசையமைப்பாளர் ஆரோல் கரோலீ பேசுகையில்,

“ இப்படத்தின் மூலம் எம்முடைய இரண்டு கனவு நனவாகியிருக்கிறது. இப்படத்தின் டீசரையும், ஒடியோவையும் மணிரத்னமும், ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தவகையில் இவர்களை சந்தித்தது, எம்முடைய கனவு நிறைவேறியது. இந்த படத்தின் கதையை கேட்டவுடன் எம்முடைய திறமையை சரியாக வெளிப்படுத்தும் படைப்பு என்று எண்ணி, முழுமையான ஈடுபாட்டுடன் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறேன்.” என்றார்.

“ ஒரு இளைஞனும், இளைஞியும் நோக்கமே இல்லாமல், திட்டமிடப்படாத ஒரு பயணத்தை தொடங்குகின்றனர். பயணம் செய்யும் பொழுது அவர்களுக்குள் ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்கின்றனர். அந்த இலக்கை அவர்கள் அடைந்தார்களா? அது என்ன வகையான இலக்கு? என்பதே படத்தின் கதை. மிக குறைந்த முதலீட்டில், நேர்த்தியாக, திட்டமிட்டபடி இதனை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

திரைப்படத் துறையில் நிர்வாக தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி பிரபலமான மாலா மணியன், இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37