15 வீத வற் வரி அதிகரிப்பு   நாளை முதல் அமுல்  

Published By: MD.Lucias

01 May, 2016 | 06:27 PM
image

(எஸ்.வினோத்)

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியான வற் வரி     நாளை இரண்டாம் திகதி  திங்கட்கிழமை  முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

 அதன் பிரகாரம் இது வரைக்காலமும் அறவிடப்பட்டு வந்த  11 சதவீதமான பெறுமதி சேர் வரி   நாளை  முதல் 15 சதவீதமாக நடைமுறைப்படுத்தப்படும்  என்று   நிதியமைச்சு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை பெறுமதி சேர் வரிக்கு உள்ளடக்கப்படாத மின்சார  கட்டணத்திற்கு எதிர்வரும் காலத்திலும் இவ்வரி உள்ளடக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தேசத்தை கட்டியெழுப்புதலுக்கான வரியில்  மின் கட்டணம் நாளை  முதல் உட்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு இது வரைக்காலமும் வற்வரி விலக்களிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள், தொடர்பாடல் சாதனம் அல்லது இயந்திரங்கள் , உயர் தொழில்நுட்ப சாதனங்கள் சார் தொடர்பாடல் துறைக்கும்  சுகாதார சேவை ,நீர்கட்டணம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணம் ஆகியவற்றிற்கும்  குறித்த வற் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும்  என அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  மருந்து பொருட்களுக்கு வற்வரி  அறிவீடு  மேற்கொள்ளப்படாத நிலையில் தனியார் துறை சுகாதார சேவைக்கு வற் வரி சீர்த்திருத்தம் தாக்கம் செலுத்தும் என நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வற் வரி அதிகரிப்பானது எவ்வகையிலும் சாதாரண பொது  மக்களுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத் திட்டமானது  பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கத்தை கொண்டதாகவே அமைந்துள்ளது. 

எனினும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள  பொருளாதார சிக்கல் நிலை மற்றும் இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி  என்பவற்றை கருத்தில் கொண் டே இந்த வற் வரி சீர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இதில் சாதாரண மக்களுக்கு பாதிப்பபை ஏற்படுத்தும் எந்த செயற்பாட்டுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28