இலங்கை மீதான இந்தியாவின் கவனம்

Published By: Digital Desk 3

15 Jun, 2019 | 04:40 PM
image

உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் பல சர்­வ­தேச நாடு­க­ளையும் இலங்­கை­யின்பால் ஈர்த்­துள்­ளன. அந்த வகையில் இந்­தியா அயல்­நாடு என்ற உரி­மை­யோடு இலங்கை விவ­கா­ரங்­களைக் கையில் எடுக்க முனைந்­துள்­ளது.

இது இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தாரம் மற்றும் பாது­காப்பு நிலை­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி சமைப்­ப­தற்­கான பிள்­ளையார் சுழி­யா­கவே தோன்­று­கின்­றது.

இந்தத் தொடர் குண்டுத் தாக்­கு­தல்­களில் சர்­வ­தேச இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்­பா­கிய ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்பின் மறை­கர நிலை­மையே இதற்கு முக்­கிய காரணம் என உண­ரப்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவின் உள்­ளக மற்றும் பிராந்­திய நலன் சார்ந்த பாது­காப்பு நிலை­மை­களில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் என்­பது முக்­கிய இடத்தை வகிக்­கின்­றது.

அயல்­நா­டா­கிய பாகிஸ்­தானின் ஊடாக இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் தனக்கு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக இந்­தியா வெளிப்­ப­டை­யா­கவே குற்றம் சுமத்தி வந்­தி­ருக்­கின்­றது. இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களின் சந்­தேக நபர்கள் இந்­தி­யாவில் உள்ள சில­ருடன் தொடர்­பு­களைப் பேணி­யி­ருந்­ததை இந்­தியப் புல­னாய்வுத் துறை­யினர் கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றனர்.

இலங்­கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்ற தக­வலை பயங்­க­ர­வா­தி­களின் இலங்கை இந்­தியத் தொடர்பு வழி­களின் மூல­மா­கவே இந்­திய புல­னாய்வு அதி­கா­ரிகள் கண்­ட­றிந்து முன்­ன­தா­கவே இலங்­கையை எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தி­யாவின் அந்த முன்­னெச்­ச­ரிக்­கையை இலங்கை உரிய முறையில் கவ­னத்திற் கொள்­ள­வில்லை. தாக்­கு­தல்கள் குறித்த எச்­ச­ரிக்­கையைத் தொடர்ந்து பாது­காப்பு நிலை­மை­களில் விழிப்­புடன் செயற்­பட்­டி­ருக்க வேண்­டிய பொறுப்­பையும் இலங்கை கோட்டை விட்­டி­ருந்­தது. இலங்­கையின் தேசிய பாது­காப்பு நிலை­மை­களில் இதனால் பெரிய ஓட்டை விழுந்­தி­ருந்­தது. இந்தப் பாது­காப்பு ஓட்டை என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. இந்­தி­யாவைப் பொறுத்­த­மட்டில் அது மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாகும்.

முத­லா­வது வெளி­நாட்டு

 அரச தலைவர்

இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத எச்­ச­ரிக்கை தொடர்பில் இலங்கை அரசு கவ­னக்­கு­றை­வாக நடந்து கொண்­டது இலங்­கை­யுடன் இந்­திய அகப் புற பாது­காப்­பையும் பாதிக்க வல்ல ஒரு தவ­றாகும். பார­தூ­ர­மான அந்தத் தவ­றினால் 250க்கும் மேற்­பட்ட அப்­பா­விகள் கொன்­றொ­ழிக்­கப்­பட்­டார்கள். தேவா­ல­யங்கள், ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்கள் என்­ப­னவும் பெரும் சேதத்­திற்கு உள்­ளா­கின.

பாரிய உயிர் மற்றும் உடைமைச் சேதங்­க­ளையும், தேசிய அளவில் உயிர் அச்­சு­றுத்தல் சார்ந்த உள­வியல் அச்ச உணர்­வையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்தத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ரா­வது, தேசிய பாது­காப்பில் அர­சாங்கம் ஒன்­றி­ணைந்த நிலையில் காரி­யங்­களைக் கையாளத் தவ­றி­யி­ருக்­கின்­றது.

தேசிய பாது­காப்பு ஏற்­பா­டு­களில் ஏற்­பட்­டி­ருந்த தவ­றுகள், ஓட்­டைகள் என்­ப­வற்­றுக்கு உளப்­பூர்­வ­மாகப் பொறுப்­பேற்று உரிய முறையில் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கும் அப்­பா­வி­க­ளான மித­வாத முஸ்லிம் மக்­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்கும் தவ­றி­யி­ருக்­கின்­றது.

நடந்து முடிந்த தவ­றுகள் தொடர்­பி­லான உண்மை நிலை­மை­களைக் கண்­ட­றி­வ­திலும் அரச தரப்பில் உரிய பொறுப்­பு­ணர்ச்­சியைக் காண முடி­ய­வில்லை. மாறாக அதி­காரப் போட்டி மனப்­பாங்­கி­லேயே அரச தரப்பின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்­கின்­றன. நானா, நீயா – யார் பெரி­யவன் என்ற அதி­காரப் போட்­டியே அரச தரப்பின் செயற்­பா­டு­களில் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி தனது பிர­தமர் பத­வியில் இரண்­டா­வது பருவ காலத்தின் முத­லா­வது வெளி­யு­றவு நட­வ­டிக்­கை­யாக இலங்­கைக்குக் குறு­கிய கால விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து, இலங்­கைக்கு விஜயம் செய்து குண்டுத் தாக்­குதல் நடை­பெற்ற இடத்தைப் பார்­வை­யிட்ட முத­லா­வது வெளி­நாட்டு அரச தலை­வ­ரா­கவும் அவர் திகழ்­கின்றார்.

பத­வி­யேற்பும் இலங்கை

 விஜ­யமும்

அயல்­நா­டா­கிய இலங்­கையில் ஒரு பயங்­க­ர­வாத அனர்த்தம் நேர்ந்­துள்­ளதே என்ற அனு­தாப உணர்வைப் பின்­ன­ணி­யாகக் கொண்­ட­தாக பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் விஜயம் தோற்­றி­னாலும், அந்த விஜயம் சர்­வ­தேச முக்­கி­யத்­துவம் உடை­யது. ஒரு சில மணித்­தி­யா­லங்­களே நீடித்­தி­ருந்­தாலும்,  ஒரு தேர்­தலின் பின்னர் பத­வி­யேற்­றதும் கையாள வேண்­டிய பல தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க பிரச்­சி­னைகள் குவிந்து கிடந்த ஒரு தரு­ணத்­தி­லேயே அவர் மாலை­தீ­வுக்கும், இலங்­கைக்­கு­மான குறு­கிய கால விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

ஓரி­டத்தின் அல்­லது ஒரு நாட்டின் பாது­காப்பு என்­பது, அதன் எல்­லைப்­பு­றங்­களின் பல­மான பாது­காப்­பி­லேயே அதிகம் தங்­கி­யி­ருக்­கின்­றது. அந்த வகையில் இந்­தி­யாவின் பாது­காப்பு என்­பது அதன் ஒரு பக்­கத்தில் முக்­கி­யத்­துவம் மிக்க எல்­லை­க­ளா­கிய இலங்கை மற்றும் மாலை­தீவு ஆகிய நாடு­களில் பாது­காப்பு வலு­வா­ன­தாக இருக்க வேண்­டி­யது அவ­சியம். அத்­துடன், அந்த நாடுகள் நட்பு நாடு­க­ளா­கவும் நேசத்­துக்­கு­ரிய நாடு­க­ளா­கவும் இருக்க வேண்­டி­யது அவ­சியம்.

இத்­த­கைய ஒரு நிலைப்­பாட்டில், இந்தப் பிராந்­தி­யத்தில் ஓர் உலக பயங்­க­ர­வாதத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்ள ஒரு சூழலில் தனது அயல்­நா­டு­க­ளா­கிய மாலை­தீ­வையும், இலங்­கை­யையும், நட்பு நிலையில் பாது­காப்பு பல­முள்­ள­தாக வைத்­தி­ருக்க வேண்டும் என்ற முக்­கிய நோக்­கத்­துடன் இந்­தியப் பிர­தமர் இந்த விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார் என கருத முடியும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான அரச முறை­யி­லான உற­வு­களில் முன்­ன­ரிலும் பார்க்க அதிக மாற்­றங்கள் ஏற்­ப­டலாம் என்­பதை குறித்துக் காட்டும் வகை­யி­லேயே இந்த விஜயம் அமைந்­துள்­ளது.

தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து நரேந்­தி­ர­மோடி பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற வைப­வத்தில், இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொள்வார் என்று இந்­தியத் தரப்­பி­லி­ருந்தே முதலில் அறி­வித்தல் வெளி­யா­கி­யி­ருந்­தது. அந்த அறி­வித்­த­லுக்­க­மைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த வைப­வத்தில் கலந்து கொண்டார்.

அந்த வைப­வத்தில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு விஜயம் செய்வார் என்ற அறி­வித்­தலும் இந்­தியத் தரப்பில் இருந்தே வெளி­யா­கி­யி­ருந்­தது. வழ­மை­யாக இத்­த­கைய விஜ­யங்­க­ளுக்­கான அழைப்பு சம்­பந்­தப்­பட்ட நாடு­களின் அரச தலை­வர்­க­ளி­னா­லேயே விடப்­ப­டு­வது வழக்கம். ஆனால் மோடியின் விஜ­யத்­தின்­போது அத்­த­கைய அழைப்பை இலங்கை விடுத்­தி­ருந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

ஒட்­டு­மொத்­தத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இலங்­கையின் அர­சியல் ஸ்திர­மற்று அதி­காரப் போட்டி கார­ண­மாகக் குழம்­பி­யி­ருக்­கின்ற ஒரு நிலை­மையை, ஒரு வகையில் தனக்கு சாத­க­மாக்­கிய வகை­யி­லேயே இந்­தியப் பிர­த­மரின் இலங்கை விஜயம் அமைந்­தி­ருந்­தது என்று கரு­து­வ­தற்கும் இட­முண்டு. 

பின்­னணி

சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­களின் பின்­பு­லத்தில் நடத்­தப்­பட்ட தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் கார­ண­மாக அர­சாங்கம் நிலை­கு­லைந்து போனது. இந்த ஆபத்­தி­லி­ருந்து மீள்­வ­தற்கு வழி­வகை தெரி­யாத ஒரு தடு­மாற்­ற­மான நிலை­மையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எற்­பட்­டி­ருந்­தது. அத்­த­கைய ஒரு நிலை­யில்தான் ஐ.எஸ்.­ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பை நோக்கி இலங்­கையைக் கைவிட்­டு­வி­டு­மாறு அவர் வேண்­டுகோள் ஒன்றை விடுத்­தி­ருந்தார். அதேபோன்று சர்­வ­தேச நாடு­களும் இக்­கட்­டான அந்த நிலையில் இலங்­கையைப் பாது­காக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்­கை­யையும் அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

உண்­மையில் சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பா­கிய ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்­பி­னரின் பின்­பு­லத்­தி­லான பயங்­க­ர­வாதத் தொடர் குண்டுத் தாக்­கு­தலை இலங்கை அர­சாங்­கமோ அல்­லது பாது­காப்புப் படை­யி­னரோ எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்­காக ஆயு­த­மேந்திப் போராட நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களை பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­த­ரித்து, அவர்­களை ஆயுத ரீதி­யாக மௌனிக்கச் செய்­ததன் ஊடாக பயங்­க­ர­வா­தத்தை வெற்­றி­கொண்­ட­தாகப் பெருமை கொண்ட அர­சாங்கம், மீண்டும் தலை­யெ­டுத்­து­விடும் என்ற பொய்­யான தோற்­றத்தை உரு­வாக்கி, இல்­லாத புலிப்­ப­யங்­க­ர­வா­தத்தின் மீது குறி­வைத்து வடக்­கிலும் கிழக்­கிலும் பாது­காப்புப் படை­யி­னரை அரசு நிலை­கொள்ளச் செய்­தி­ருந்­தது.

புலிப்­ப­யங்­க­ர­வா­தத்தை மீண்டும் அனு­ம­திக்­க­லா­காது என்ற அர­சியல் வயப்­பட்ட சிந்­த­னை­யி­லேயே அரசு தேசிய பாது­காப்பைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் உண்­மை­யான பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லா­கிய திட்­ட­மிட்ட தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­போது அர­சாங்கம் ஆடிப்­போ­னது. அந்தத் தாக்­கு­தலின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டிய நடை­மு­றை­களை செவ்­வனே நடை­மு­றைப்­ப­டுத்­தாமல், அந்­தத் தாக்­கு­த­லுக்­கான பொறுப்­புக்­களை ஆளா­ளுக்குப் பழி­சு­மத்தி தட்­டிக்­க­ழிக்­கின்ற போக்­கி­லேயே அரச தலை­மைகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் பல்­வேறு கார­ணங்­களை முன்­னிட்டு, இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி இலங்­கைக்­கான மிகவும் குறு­கிய கால விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

நோக்கங்கள்

மாலை­தீ­வுக்­கான விஜ­யத்­தின்­போது இந்­தி­யா­வுடன் பல முக்­கிய விட­யங்­களில் இரு நாட்டுத் தலை­வர்­க­ளுக்கும் இடையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்­தியத் தரப்பில் பல உதவித் திட்­டங்­க­ளுக்கும் ஒப்­புதல் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­வேளை, இலங்­கையைப் பொறுத்­த­மட்டில், அர­சியல் ஸ்திரத்­தன்மை, பாது­காப்பு, அபி­வி­ருத்தி ஆகிய விட­யங்­களில் இந்­தியா அதிக கவனம் செலுத்தும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது, 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2018 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் அரங்­கேற்­றிய சதி­மு­யற்­சி­யை­ய­டுத்து, இலங்­கையின் அர­சியல் ஸ்திரத்­தன்மை சீர்­கு­லைந்து போனது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜ­பக் ஷவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு அவர் அர­சி­ய­ல­மைப்பை மீறி மேற்­கொண்ட முயற்சி பிசு­பி­சுத்துப் போனது.

உச்ச நீதி­மன்­றத்தின் தீர்ப்­பை­ய­டுத்து பதவி நீக்கம் செய்­யப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீண்டும் பிர­தம­ராகி, நிலை­மைகள் சுமு­க­மா­கிய போதிலும், அர­சியல் ஸ்திர­ம­டை­ய­வில்லை.  ஜனா­தி­ப­திக்கும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் அதி­காரப் போட்­டியும், அதனைச் சார்ந்த கசப்­பு­ணர்வும் பகி­ரங்­க­மா­கவே இடம்­பெறத் தொடங்­கின.

(19ஆம் பக்கம் பார்க்க)

இலங்கை மீதான...

(13ஆம் பக்கத் தொடர்ச்சி)

அக்­டோபர் அர­சியல் சதியைத் தொடர்ந்து நீதி­மன்றத் தலையீட்டின் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தேசிய பாது­காப்பு விட­யங்கள் தொடர்­பாகக் கலந்­து­ரை­யா­டு­கின்ற பாது­காப்புச் சபையின் கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன அழைப்­பதை நிறுத்திக் கொண்டார். இதனால், நாட்டின் முக்­கிய அர­சியல் தலை­வ­ரா­கிய பிர­தமர் இல்­லா­ம­லேயே பாது­­காப்புச் சபை தேசிய பாதுகாப்பு தொடர்­பி­லான விட­யங்­களில் முடி­வு­களை மேற்­கொண்­டது.

இந்த நிலையில் 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அதி­ர­டி­யாக நடத்­தப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­னரும், பாது­காப்புச் சபைக்கு பிர­தமர் அழைக்­கப்­ப­டாத நிலை­மையே தொடர்­கின்­றது.

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான அதி­காரப் போட்டி கார­ண­மாக நாட்டின் அர­சியல் தொடர்ச்­சி­யாக ஸ்திரத்­தன்­மை­யற்று காணப்­ப­டு­கின்­றது, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான உண்­மை­யான நிலை­மை­களைக் கண்­ட­றி­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­களில் அரச தரப்­பி­னரின் பொறுப்­பற்ற தன்­மைகள் பற்றி பல தக­வல்கள் வெளி­யா­கிய வண்ணம் உள்­ளன.

இதனால் தேசிய பாது­காப்­புக்கே பாதிப்பு ஏற்­படும் எனக் குறிப்­பிட்டு, தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­களைக் கைவிட வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்த வேண்­டு­கோள்கள் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இதனால், பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான முறு­கல்கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­யில்தான் இந்­தியா இலங்­கையின் அர­சியல் ஸ்திரத்­தன்மை குறித்து கரி­சனை கொண்­டி­ருக்­கின்­றது.

பாது­காப்பும் அபி­வி­ருத்­தியும்

அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்கு அடுத்­த­தாக இலங்­கையின் பாது­காப்பு மற்றும் அபி­வி­ருத்தி விட­யங்­களில் இந்­தியா கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்­றது. தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான புலன் விசா­ர­ணை­களில் ஏற்­க­னவே இந்­திய குழு­வொன்று இலங்­கைக்கு வருகை தந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

அதற்கு மேல­தி­க­மா­கவே இலங்­கையின் பாது­காப்பு தொடர்பில் இந்­தியா கரி­சனை கொண்­டி­ருக்­கின்­றது. சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலில் இருந்து விடு­ப­டு­கின்ற அதே­வேளை, அந்தப் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் குறித்த விட­யங்­களில் இலங்­கைக்கு இந்­தியா உத­வு­வ­தாக இருக்­கலாம்.

அதே­வேளை, இலங்­கையின் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மற்றும் குறிப்­பாக கொழும்பு துறை­முக நகரத் திட்டம் என்­ப­வற்றில் சீனாவும் ஏனைய நாடு­களும் பங்­கேற்­றி­ருப்­பது இந்­தி­யாவின் நலன்­க­ளு­க்கும் பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்­த­லா­னது என்ற கருத்தும் நில­வு­கின்­றது. எனவே, அந்த விட­யத்தில் இந்­தியா தனது பாது­காப்பு நலன்­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதை அல்­லது இலங்­கையின் அபி­வி­ருத்தித் திட்­டங்­களில் அது குறித்து தீவிர கவனம் செலுத்­து­வதை இந்­தியா குறி­யாக இருக்­கலாம்.

மறு­பு­றத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து பெரும் அச்­சு­றுத்­த­லுக்கும் வன்­மு­றை­க­ளுக்கும் ஆளா­கி­யுள்ள முஸ்லிம் மக்­களின் பாது­காப்பு, தீவிர பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் கார­ண­மாகப் பாதிப்­புக்கு உள்­ளா­கின்ற தமிழ் மக்­களின் பாது­காப்பு என்­ப­வற்­றிலும் இந்­தியா கவனம் செலுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­பமும் உள்­ளது.

அதே­வேளை, அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் தொடர்பில் இந்­திய அனு­ச­ர­ணை­யுடன் ஆரம்­ட­பிக்­கப்­பட்ட பல வேலைத்­திட்­டங்கள் இலங்கை அர­சாங்­கத்­தினால் முறை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலைமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது, இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டதாகவும், ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்காமல் புறக்கணித்துச் செயற்படுகின்ற போக்கில் செயற்படுவதாகவும் இந்தியத் தரப்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், அதன் பின்னர், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் என்பவற்றினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, இதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியா இலங்கைக்கு உதவும் வகையில் கவனம் செலுத்தக் கூடும். குறிப்பாக உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக பலாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்துக்களை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு,

பலாலிக்கான விமான சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பாடசாலை விடுமுறைக்கால பயணங்களை அதிகரிக்க முடியும் என்ற வகையிலான ஆலோசனையை ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியாயினும் உயி;ர்த்த ஞாயிறு தின திட்டமிட்ட தொடர் பயங்கரவாதத் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இலங்கை மீது இந்தியா கூடுதலான கவனத்தைச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.

இந்தியாவின் இலங்கை மீதான இந்தக் கவனம் என்பது, உள்நாட்டிலும், அதேபோன்று தெற்காசியப் பிராந்தியத்திலும் அரசியல் பொருளாதார, பாதுகாப்பு நிலைமைகளில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கவும் கூடும். 

பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13