பரீட்சை தரப்படுத்தலை வெளியிடாதிருக்க தீர்மானம்!

Published By: Vishnu

15 Jun, 2019 | 04:02 PM
image

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய எதிர்காலத்தில் அகில இலங்கை ரீதியில் தரப்படுத்தல்களை வெளியிடாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கல்வி அமைச்சர் தெரிவித்ததாவது, 

சாதாரண தரப் பரீட்சையிலும் , புலமைப் பரிசில் பரீட்சையிலும் இவ்வாறு போட்டித்தன்மையை ஏற்படுத்துவதனால் மாணவர்கள் மீது அதிக சுமை ஏற்படுத்தப்படுகின்றது. எனவே இது குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சினால் விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷேட குழுவின் மூலம் முதல் நிலை தரப்படுத்தல்களை மேற்கொள்ளது பரீட்சையில் சித்தியடைந்திருந்தால் ' சித்தி " என்பதை மாத்திரம் குறிப்பிடும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

தற்போது நடைமுறையிலுள்ளதைப் போன்று அகில இலங்கை ரீதியில் தரப்படுத்தல்களை மேற்கொண்டு மாணவர்களிடையே அதிக போட்டித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.  அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான வெட்டுப்புள்ளிகளுடன் கூடிய பரீட்சைகள் இல்லை. இந்நிலையில் இலங்கையில் பரீட்சைகள் நடத்தப்படுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கமைய 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பிலும் தீர்மானம் எடுக்க வேண்டும். 

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சைக்காக வேறு ஒரு முறைமை அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது. இதே வேளை புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய எதிர்காலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் என தரப்படுத்தல்களை அறிவிக்கப் போவதில்லை. எவ்வாறிருப்பினும் இது தேர்தல் காலம் என்பதால் அடுத்த வேலைத்திட்டத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02