சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மேதினக் கூட்டம்  பெலவத்த புத்ததாச மைதானத்தில் நடைபெற்றது.  இன்று பிற்பகல் ராஜகிரிய ஆயுள்வேத சந்தியிலிருந்து ஆரம்பமான   ஜனநாயகக் கட்சியின் மே தின ஊர்வலம் பாராளுமன்ற சந்தியூடாக    பெலவத்த புத்ததாச மைதானத்தை சென்றடைந்தது. 

ஊர்வலத்தில்  அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.   

'தாஜூதீன்  மற்றும் லசந்த விக்ரமதுங்க விவகாரம்  தொடர்பில் கொலையாளிகளை கண்டுபிடி,  மனித உரிமைகளை  நிலைநாட்டு, உள்ளிட்ட பல்வேறு  கோஷங்களை எழுப்பிய வண்ணம்  ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள்    மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பின்னர் பெலவத்த  புத்ததாச மைதானத்தில்     ஜனநாயகக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்றது.